nafo
Tamil - தமிழ்
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Matematikk begreper
Flerspråklige fortellinger
Tospråklig materiell
Tospråklige undervisningsopplegg

மழலையர் பள்ளி தொடக்க ஆலோசனைகள்

   20161113 113246 3Her er noen tips om tilvenning i barnehagen.

  • குழந்தைகள் சிறுவர்பூங்காவிற்கு   தொடங்குவதற்கு முன்பே அவர்களுக்கு தேவையான நேரத்தை ஒதுக்குவதற்குத் திட்டமிடுங்கள். அதாவது தாய், தந்தை அல்லது பாதுகாவலர் குழந்தைகளுடன் சிறுவர் பாடசாலைக்குச் செல்வதற்குத் திட்டமிடுங்கள்.
  • அனேகமான வேலைத்தளங்களில் 3 நாட்கள் ஊதியத்துடன் குழந்தைகளுடன் மழலையர்பள்ளிக்குச் செல்வதற்கு விடுமுறை எடுக்கலாம். குழந்தைகள் பழகும் காலம் ஒவ்வொரு குழந்தைக்குக் குழந்தை வேறுபடும். இக் காலகட்டத்தில் குழந்தைகளின் மனநிலை உடல்நிலையினைத் தயார் செய்யும் காலம் மிகவும் வேறுபாடதானதாக இருக்கும்.
  • வேலைத்தளத்திலிருந்து மூன்று நாட்களுக்கு விடுமுறை எடுத்தல் வேண்டும். இதில் தாய் தந்தை அல்லது பாதுகாவலர் கட்டாயமாக குழந்தையுடன் நிற்க வேண்டும். இருவருமே குழந்தையுடன் நிற்க முடிந்தால் மிகவும் நல்லது.
  • குழந்தைகள் பெற்றோர் கூறுவதைப் புரிந்து கொள்ளக் கூடியவராக இருப்பின் அவர்களுடன் உரையாடி அவர்களைத் தயார்ப்படுத்துவது நல்லது.
  • சிறுவர் பூங்காவிற்குச் குழந்தைகளைக் கூட்டிச் சென்று பார்வையிடலாம். வெளிச் சுற்றாடலில் சென்று விளையாட விடலாம்.
  • முதலாவது கிழமை மிகவும் குறுகிய நேரம் சிறுவர் பூங்காவில் குழந்தையை விடுவது நல்லது. இதனால் குழந்தைகள் தாம் பாதுகாப்பாக இருப்பதை உணர்வதுடன் பெற்றோரைப் பிரிந்திருக்கும் ஏக்க உணர்வும் குறைந்து விடும்.
  • சிறுவர் பூங்காவில் பணிபுரிபவர்களுடன் மனம் திறந்து பெற்றோர் உரையாடுவது முக்கியம். நீங்கள் கலந்துரையாடும் விடயங்கள் குழந்தைகளுடன் பணியாற்றுபவர்களுக்கு இலகுவாக அமைவதால் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உணர்வர்.
  • குழந்தைகளுக்கு உடலில் அல்லது உள நலத்தில் ஏதாவது நோய்கள் இருந்தால் மறைக்காமல் கூறுவது அவசியம். பணியாளர்கள் இதனை வெளியில் கூறாமல் கடைப்பிடிப்பது அவர்களது கடமையாகும்.
  • உங்கள் குழந்தைகளைப் பற்றிய சகல விடயங்களும் இரகசியமாகப் பாதுகாக்கப்படும். உங்கள் குழந்தையின் நடவடிக்கைகளில் ஏதாவது சந்தேகம் ஏற்படினும் உங்கள் குழந்தைக்குப் பொறுப்பான பணியாளரிடம் கேளுங்கள். அவர் உங்கள் குழந்தைக்குத் தேவையான நிபுணர்களை விரைவிலேயே அணுகி குழந்தையின் எதிர்காலததைச் சீர்திருத்த உதவியாக அமையும்.
  • குழந்தைகளுக்கு ஒவ்வாமையான உணவுகள் என்பவற்றை பணியாளரிடம் கட்டாயமாக கூறுங்கள். எழுதிக் கொடுங்கள்
  • அவர்கள் பயப்படும் விடயங்களாவன உதாரணமாக ஒலிகள், உருவங்கள், விலங்குகள்என்பவற்றை பணியாளரிடம் கூறுங்கள்.
  • குழந்தைகளைச் சிறுவர் பூங்காவில் பழகுவதற்குப் பயன்படுத்தும் நேரத்திலேயே தங்களிற்கு தெரியாத விடயங்களைக் கேட்டு அறியுங்கள். அதாவது செயற்பாடுகள், உணவுமுறை, வெளியே உலாப்போதல், தூங்குமிடம்,   உடைவகைகள்,  தேவையான பொருட்கள் விதிமுறைகள்….போன்றவை.
  • குழந்தைக்குப் பிடித்த விளையாட்டு, உணவு,  பழக்கவழக்கம்,  பயன்படுத்தும் பொருட்கள் என்பவற்றை பணியாளரிடம் கூறுங்கள்.
  • குழந்தைகள் தொடர்பு கொள்வதற்காகப் பயன்படுத்தும் சைகைகள், ஒலிகள், சொற்கள். தமிழில் குழந்தை பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களுக்கான சொற்கள். உதாரணமாக தண்ணீரை குழந்தைகள் டா,  நீ என முழுமையாக உச்சரிக்க முடியாது கூறுவர். இவ்வாறான சிறு சொற்களைக் கூட மறவாது எழுதிக் கொடுப்பது நன்று.
  • குழந்தைகள் அழுதால் வீட்டில் எப்படி அவர்களைத் தேற்றுவீர்கள் போன்ற விடயங்களையும் பணியாளரிடம் கூறுங்கள்.
  • முதல் மூன்று நாட்களும் அங்கு நடைபெறும் அனைத்து செயற்பாடுகளிலும் கலந்து கொள்ளுங்கள். அத்துடன் விளங்காதவற்றைக் பார்த்துக் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
  • குழந்தைகள் விரும்பிப் பாவிக்கும் பொம்மை, விளையாட்டுப்பொருள், சூப்பி,  துணிகள் இருந்தால் கொண்டு செல்லுங்கள். பணியாளர்களிடம் காட்டி குழந்தைகளின் இடத்தில் வையுங்கள்.
  • குழந்தைகளை ஒப்படைத்து விட்டுப் போகும் போது குழந்தைகளிடம் கை காட்டி, முத்தமிட்டு,  சென்று வருவதாகக் கூறிவிட்டு செல்லுங்கள். ஒளிந்து செல்ல வேண்டாம்.
  • பணியாளர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற மனநிறைவோடு செல்லுங்கள். உங்கள் முகத்தில் ஏக்கமும் பயமும் இருப்பின் அதனை குழந்தைகள் பார்த்து உணர்ந்து கொண்டு மேலும் பயப்படுவர்.
  • குழந்தையைக் வீட்டிற்குக் கூட்டிச் செல்ல யார், எப்போது வருவார்கள் என்பதை குழந்தைகளிடமும் பணியாளரிடமும் கூறிச் செல்லவும். குழந்தைகளிற்கு விளங்காது தானே என யோசிக்காதீர். பெற்றோரின் ஒவ்வொரு செயலையும் குழந்தைகள் புரிந்து கொள்வர்.
  • குழந்தைகளுக்குத் தேவையான மாற்று உடைகள் (காலநிலைக்கு ஏற்றவாறு) உள்ளே, வெளியே பாவிப்பதற்குத் தேவையானவற்றை அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் வைக்க மறவாதீர்கள்.
  • உங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தக் கூடிய தொலைபேசி எண்ணை பதிவு செய்யக் கொடுப்பதுடன் தாங்களும் சிறுவர் பூங்காவின் தொலைபேசி எண்ணை வைத்திருங்கள்.
  • குழந்தையினைப் பற்றி அறிய வேண்டும் என ஆவலாக இருந்தால் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குழந்தையின் நிலையைப் பணியாளரிடம் கேட்டு அறியலாம்.
nafo logo Innholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   - www.morsmal.no