nafo
Tamil - தமிழ்
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Matematikk begreper
Flerspråklige fortellinger
Tospråklig materiell
Tospråklige undervisningsopplegg

koronaDette er en kort veiledning til foreldrene angående Korona tiltak i barnehagen.  

மழலையில் பள்ளியில் அன்றாடம் நடைமுறைப்படுத்தப்படும் கொரொனாவினைப் பற்றிய பெற்றோருக்கான தகவல். தொற்றுநோயைக் குறைக்க மழலையர் பள்ளியில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுகிறது.

பச்சை மஞ்சள் சிவப்புப் போன்ற வீதிவிளக்கின் விதிக்கமைய கொரொனா தொற்றுவின் நிலையும் கணிப்பிடப்படுகிறது. கொரொனாவின் தொற்று நிலையைப் பொறுத்தே இந் நிறங்கள் தீர்மானிக்கப்படுகிறது. நோர்வேயில் கொரொனா தொற்றின் நிலைமையைப் பொறுத்தே பின்பற்றப்பட வேண்டிய நிறங்கள் தீர்மானிக்கப் படுவதுடன் மழலையர் பள்ளியின் நடவடிக்கைகளும் செயற்படுத்தப்படுகிறது. குழந்தைகள் மழலையர் பள்ளிக்குச் செல்வது பாதுகாப்பானது. குழந்தைகளின் உடல் பராமரிப்புக்கான தேவையை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருவோம். மேலும் அனைத்து குழந்தைகளும் பாதுகாப்பாகவும் இணைந்தும் மகிழ்வாகவும் இருப்பதற்கான செயற்பாடுகளைச் செய்கிறோம்.

 

இக் காலகட்டத்தில் கிருமித் தொற்றைத் தடுப்பதற்கான அனைத்து செயற்பாடுகளிலும் கவனமாக இருப்போம்.

மழலையர் பள்ளியில் கவனிக்க வேண்டியவை: •

நோய்வாய்ப்பட்டிருந்தால் மழலையர் பள்ளிக்கு வரக் கூடாது. • குழந்தைகளைக் கை கழுவுவதற்கான நல்ல நடைமுறைகளை பழக்குவதனால் அவர்கள் கற்றுக்கொள்வார்கள். •

மழலையர் பள்ளியை நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். மழலையர் பள்ளி அன்றாடச் செயல்முறை எவ்வாறு இருக்கும் ?

பச்சைநிற நிலை:

மழலையர் பள்ளி அன்றாட வாழ்க்கை சாதாரணமாக இருக்கும் .ஆனால் மழலையர் பள்ளியில் பணி புரிபவர்கள் கைகுலுக்கி வணக்கம் சொல்வதையும் பெரியவர்கள் ஒருவருக்கொருவர் அணைப்பதையும் தவிர்த்துக் கொள்வார்.

மஞ்சள்நிற நிலை:

மழலையர் செல்லும் பிரிவான அறைக்குள் மழலையர் சேர்ந்து இருக்கலாம். மேலும் அனைத்து குழந்தைகளும் மழலையர் பள்ளியில் முழுநேர சலுகையைப் பெறலாம். வெளிப்புற பகுதி பிரிக்கப்பட்டு மழலையர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டுவர். அக் குழுவிற்கு ஒரு நிரந்தர ஊழியர் பணிபுரிவார். 
மழலையர் பள்ளியில் பணி புரிபவர்கள் கைகுலுக்கி வணக்கம் சொல்வதையும் பெரியவர்கள் ஒருவருக்கொருவர் அணைப்பதையும் தவிர்த்துக் கொள்வார்.

சிவப்புநிற நிலை:

குழந்தைகள் சிறிய குழுக்களாக பிரிக்கப்படுவார்கள். மழலையர் பள்ளி திறக்கும் நேரம் குறைவானதாக இருக்கும். அத்துடன் பெற்றோர்கள் குழந்தைகளுடன் சந்திக்கும் நேரம் வெவ்வேறானதாக இருக்கும். குழுக்களுக்குள் நீண்ட இடைவெளியைக் கடைப்பிடிப்பதோடு இணைந்து செயற்படுவதையும் தவிர்த்துக்கொள்வர். வெளிப்புற பகுதி பிரிக்கப்பட்டும் குழுக்களாகப் பிரிந்தும் செயற்படுவர். பிள்ளைகள் கூடுதலாக வெளிப்புறப் பகுதியிலேயே விளையாடுவர். மழலையர் பள்ளியில் பணி புரிபவர்கள் கைகுலுக்கி வணக்கம் சொல்வதையும் பெரியவர்கள் ஒருவருக்கொருவர் அணைப்பதையும் தவிர்த்துக் கொள்வார்.

வீட்டிலிருந்து விளையாட்டுப் பொருட்கள் கொண்டு வர வேண்டாம். குழந்தைகள் தங்கள் வீட்டிலிருந்து விளையாட்டுப் பொருட்கள் கொண்டு வரக்கூடாது. உங்கள் பிள்ளைக்கு தூங்குவதற்கு பொம்மைகள் தேவையாயின் கொண்டு வரலாம். ஆனால் இதனை மழலையர் பள்ளியில் உள்ள மற்ற குழந்தைகளுடன் பகிர்ந்து விளையாடக் கூடாது. உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால் - மழலையர் பள்ளியில் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்

nafo logo Innholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   - www.morsmal.no