தைப்பொங்கல் விழா
Solfest (Thaippongal)
Gjennom denne fortellingen kan barna få kjennskap om solfest.
தைப் பொங்கல் விழா பற்றி மழலையர் பள்ளி சிறார்களுக்கு விளங்கக் கூடிய சின்னக் கதையாக இது எழுதப்பட்டுள்ளது.
முன்னைய காலத்தில் சிவன் என்ற ஒருவர் இருந்தார். இவரிடம் கொம்பன் என்ற காளை மாடும், சிங்காரி என்ற பசுவும் இருந்தது.
சிவன் கொம்பனிடமும் சிங்காரியிடமும் மிகவும் அன்பு கொண்டிருந்தார்.
கதிரவன் என்ற நண்பனும் இவர்களுடன் வசித்து வந்தான்.
ஒருநாள் சிவன் கதிரவனையும் மாடுகளையும் அழைத்தார். தான் கூறும் செய்தியை உலக மக்களிடம் அறிவிக்கச் சொன்னார். கதிரவனும்இ மாடுகளும் செய்வதாகக் கூறினார்கள்.
மக்களிடம் சென்று மாதம் ஒரு முறை உண்ணுங்கள்.
ஒவ்வொரு நாளும் குளியுங்கள் என்று கூறச் சொன்னார்.
மாடுகளும் சிவனின் விருப்பத்தை மக்களிடம் கூறச் சென்றன.
சிவன் கூறிய அறிவித்தலை மறந்து விட்டன.
மக்களை ஒவ்வொரு நாளும் உண்ணும் படியும், மாதம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கும் படியும் மாறிக் கூறி விட்டன.
சிவன் மாடுகள் பிழையாகக் கூறிய செய்தியைக் கேள்விப்பட்டார். மிகவும் கோபப்பட்டார்.
மனிதர்களுக்கு ஒவ்வொரு நாளும் உணவு வேண்டுமானால் நிறையப் பயிரிட வேண்டும். நெல், கோதுமை விதைக்க வேண்டும்.
மனிதர்களிற்கோ இவற்றைச் செய்வதற்கு உடலில் பலம் காணாது. அதனால் மக்களிற்கு ஒவ்வொரு நாளும் உணவு கிடைக்க மாடுகளையும் கதிரவனையும் உதவி செய்ய வேண்டும் எனக் கட்டளையிட்டார்.
மக்களை கதிரவனுக்கும் மாடுகளுக்கும் வருடம் ஒருமுறை நன்றி செலுத்த வேண்டும் எனவும் கட்டளையிட்டார்.
அன்றிலிருந்து மாடுகளும் கதிரவனும் உழவனிற்கு உதவி செய்து வருகின்றன.
உழவன் கதிரவனுக்கும் மாடுகளுக்கும் நன்றி செலுத்துகின்றான்.
இவ்வாறு நன்றி செலுத்தும் இந்நாளே தைப்பொங்கல் தினமாகும்.