ஒரு ஊரில் வயதான தந்தை ஒருவர் தனது மூன்று மகன்மாருடன் வசித்து வந்தார். மூத்தவனது பெயர் பேர், இரண்டாவது மகனின் பெயர் போல், மூன்றாவது மகனின் பெயர் அஸ்கலாடன். ஒரு நாள் தந்தை தனது மகன்மாரைக் அழைத்தார். தனக்கு வயதாகி விட்டது. தன்னால் கடனையும் கொடுக்க முடியவில்லை. அதனால் அவர்களை காட்டிற்குச் சென்று விறகு வெட்டி விற்றுப் பணம் கொண்டு வருமாறு கூறினார். முதலில் மூத்தவனை அழைத்து காட்டிற்குச் சென்று விறகு வெட்டி வருமாறு கூறினார். மூத்தவனும் கோடரியை எடுத்துக் கொண்டு காட்டிற்குப் போனான்.
முன்னொரு காலத்தில் ஒரு அரசன் தனது அழகான மகளுடன் ஒரு நாட்டை ஆட்சி செய்து வந்தான். அந்த அரசன் தனது நாட்டிலிருக்கும் மக்களிற்கு ஒர் அறிவித்தலை விடுத்தான். ஒரு அழகான கப்பலைக் கட்ட வேண்டும். அந்தக் கப்பல் தரையிலும் காற்றிலும் தண்ணீரிலும் ஓட வேண்டும். அப்படியான கப்பலை செய்து கொண்டு வருபவருக்கு தனது அழகான மகளைத் திருமணம் செய்து தருவதுடன் தனது பாதி இராட்சியத்தையும் தருவதாக அறிவித்தான்.