nafo
Tamil - தமிழ்
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Flerspråklige fortellinger
Matematikk begreper
Veiledning till foreldre
Tospråklige undervisningsopplegg
Tospråklig materiell

காந்தவியல்

magnetismeHer har vi laget et opplegg med oppgaver og eksperimenter om magnetisme som kan brukes både i tamil morsmålsundervisning og i naturfag for mellomtrinnet. Temaet er laget etter kompetansemålene til Kunnskapløftet for 5. til 7. trinn. Antall timer : 4

Kompetansemål:

  • Formulere naturfaglige spørsmål om noe eleven lurer på, foreslå mulige forklaringer
  • Gjøre forsøk med magnetisme og forklare og presentere resultatene
  • Gjengi med egne ord informasjon fra fagtekster

வினாக்கள் அடங்கிய காந்தவியலுக்கான பாடக்கூறு ஒன்று எம்மால் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பாடம் தமிழ்மொழிக்கல்வியிலும், விஞ்ஞானக் கல்வியிலும் பயன்படுத்தலாம்.  Nordlys er resultat av jordas magnetfelt!

magnetisme.docx

 

அண்டத்தில் இரு பொருட்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இல்லாமலேயே, அவற்றிற்கிடையில் தள்ளு விசைகள், கவரும் விசைகள் என விசைகள் இருப்பதை அறிந்திருப்பீர்கள். அப்படியான விசைகள் காந்தங்களிலும் தொழிற்படும் என்பது உங்களுக்குத் தெரியும் தானே!

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் Magnesia என்ற இடத்தில் ஒரு இடைச்சிறுவன் தான் முதன்முதலில் காந்தங்களைக் கண்டு பிடித்தான். அவன் ஒருநாள் ஒரு மலை மேல் ஏறும்போது, அவனது இரும்புக் கோல், இசைக்க முடியாமல், திடீரென்று மலைக் கல்லில் இறுகி நின்றது. அந்த ஊரில் இருந்தோர், அக்கல்லுக்கு மந்திர சக்தி இருப்பதாகவே நம்பினார்கள். பல ஆயிரம் வருடங்களுக்குப் பின்னரேயே, அது மந்திர சக்தியல்ல, காந்தச்சக்தி என்று அவர்களுக்குப் புரிய வந்தது.

magnetகாந்தத்தின் கண்டுபிடிப்பு உலகின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கை அளித்துள்ளது. இன்றைய அனைத்து இயந்திரங்களிலும் காந்தங்களின் பங்கு உள்ளது. திசைகாட்டி தொடக்கம், கணனி வரை காந்தமில்லாமல் தொழிற்பட முடியாது. மின்சார உற்பத்திக்கும் காந்தங்களே தேவையாக உள்ளது. காந்தங்களைச்சுற்றி காந்த அலைகள் காணப்படும். இவ்வலைகளே இரும்பு போன்ற உலோகங்களைக் கவர்ந்திழுக்கும்.


காந்த சக்தி உள்ள பொருட்கள் யாவும் காந்தங்களென அழைக்கப்படும். புவியும் ஒரு காந்தமே! காந்தத்தின் முனைகள் வடபுலம், தென்புலம் என இரண்டு புலங்களாக அழைக்கப்படுகின்றன. காந்தசக்தி கொண்ட கற்கள் உலகில் இயற்கையாகவே காணப்படுகின்றன. ஆனால், மனிதரால் உருவாக்கப்பட்ட காந்தங்களே இன்று பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, ஒரு ஆணியை காந்தத்தினால் உரசுவதன்மூலம், ஆணி காந்த சக்தியைப் பெறச் செய்யலாம்.
புவியின் ஓடுகளுக்கிடையில் ஓடுகின்ற உலோக ion கள் காரணமாகவே, புவியும் ஒரு காந்தமாக தொழிற்படுகிறது. புவியிலும் காந்த வடமுனை, தென்முனைகள் உள்ளன. இதனால்தான், திசைகாட்டிகள் மூலமாக, புவியியல் வட, தென் முனைகளை அறியக்கூடியதாக இருக்கின்றன.

  200krநோர்வேயில் வானிலே அழகாகத் தெரிகின்ற Nordlys உக்கும் காரணம் புவியின் காந்த சக்தியேயாகும். Nordlys எவ்வாறு தோன்றுகிறது என்பதைக் கண்டுபிடித்தவர் நோர்வேயிய ஆய்வாளர் Kristian Birkeland ஆவார். இவரது புகைப்படமே நோர்வேயிய 200 Kr தாளில் காணப்படுகிறது.

மின்சாரத்தைக் கொண்டு, உருவாக்கப்படும் காந்தங்கள், மின்காந்தங்கள் எனப்படும். இன்று நாம் பயன்படுத்தும், மின் இயந்திரங்கள் எல்லாவற்றிலும் மின்காந்தங்கள் காணப்படுகின்றன.


அருஞ்சொல் அகராதி - ORDBOK


காந்தவியல் -  Magnetisme
அண்டம் - Univers                         விசைகள் - Krefter
காந்தம் - Magnet                           தொழில்நுட்பம் - Teknologi
திசைகாட்டி – Kompass               கணனி – Datamaskin
மின்சாரம் - Elektrisitetet               உலோகங்கள் - Metaller

வடபுலம் - Nord pol                      தென்புலம் - Sør pol

ஆய்வாளர் - Forsker

பயிற்சி


1. ஒரு பொருளின் மீது தொடாமல், அப்பொருளின் மேல் பிரயோகிக்கப்படும் விசை ஒன்று தருக.
2. காந்தத்தைக் கண்டுபிடித்தவராகச் சொல்லப்படுபவர் யார்?
3. காந்தத்தினால் கவரப்படக்கூடிய உலோகம் ஒன்று தருக.
4. காந்தத்தின் முனைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
5. திசைகாட்டியின் பயன் யாது?
6. Nordlys ஐக் கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
7. மின்காந்தங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன?

 Se på videoen! Lag en elektromagnet!

 

Eksperimenter

nafo logo Innholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   - www.morsmal.no