nafo
Tamil - தமிழ்
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Matematikk begreper
Flerspråklige fortellinger
Tospråklig materiell
Tospråklige undervisningsopplegg

நிறங்கள்

Farger

Her står det  hvordan man kan jobbe med farger sammen med små barn.

 

 

1 வயதிலிருந்தே சிறுவர்களுக்கு நிறங்களைப் பற்றி கலந்துரையாடுவது நன்று. அனேகமான சிறுவர்களுக்கு பெற்றோர் அல்லது மழலையர் பள்ளியின் பணியாளர்கள் கலந்துரையாடினால் விரைவிலேயே நிறங்களை சரியாக காட்டுவார்கள்.

 

சில சிறுவர்கள் பெயர்களைக் கூறுவார்கள் ஆனால் பொருட்களை பொருந்துமாறு காட்ட மாட்டார்கள். ஆகவே சிறுவர்களுக்கு நிறங்களைப் பற்றிய அடிப்படை அறிவினை விளையாட்டு ரீதியாக விளக்க வேண்டியது அவசியம்.

இதற்கான செயற்பாடுகளாக: அடிப்படை நிறங்களான பச்சை, நீலம், சிவப்பு,வற்றோடு மஞ்சள், கறுப்பு, வெள்ளை என்பவற்றை சிறுவயது முதலே பிள்ளைகளுக்கு விளையாட்டு ரீதியாக கலந்துரையாடலாம்.

உதாரணமாக:-

  • மட்டைகளில் 2 அல்லது 3 நிறங்களை வெட்டி அட்டைகள் தயாரிக்கலாம். ஒரே நிறத்தில் இரண்டு அட்டைகள் தயாரித்தால் அதனைத் தொடர்புபடுத்த விடலாம். சிறுவர்கள் தொடர்பு படுத்தும் போது பெரியவர்கள் அதன் பெயரைச் சரியாகக் கூறவேண்டும்.

  • சிறுவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளின் நிறங்களைக் காட்டி கலந்துரையாடலாம்.
  • விளையாட்டுப் பொருட்களைக் காட்டி அதன் நிறத்தைக் கூறலாம். விளையாட்டுப் பொருட்களை அடுக்கும் போது பெற்றோர் அதன் நிறங்களைக் கூறலாம். நிறங்களைக் கூறி அப் பொருட்களை எடுத்துத் தருமாறு கூறலாம். உதாரணமாகச் சிவப்புப் பந்தை எடுத்தத் தாருங்கள் எனக் கேட்டகலாம்.
  • பழங்களின் நிறங்களைப் பற்றிக் கதைக்கலாம். உதாரணமாக வாழைப்பழம் மஞ்சள் நிறம். -காய்கறிகளின் நிறங்கள் பற்றிக் கதைக்கலாம். உதாரணமாக அவரைக்காய் பச்சை நிறம். இவ்வாறு கதைக்கும் போது விளையாட்டாகப் பொருட்களைக் காட்டி மட்டுமே கதைக்க வேண்டும். சிறுவர்களுக்கு கண்ணால் பார்த்தால் மட்டுமே இவற்றை வேறுபடுத்தி அறிய முடியும்.
  • சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த செயல் வர்ணம் தீட்டுதல். அவர்களுடன் இணைந்து பெற்றோரும் எழுதுகோலின் அல்லது பசையின் நிறத்தைக் கூறியபடியே வர்ணம் தீட்டலாம். வானவில்லைக் கீறி வர்ணம் தீட்டலாம்.
  • இயற்கையைக் காட்டி அதன் நிறத்தைக் கூறலாம். உதாரணமாக புல் பச்சைநிறம்இ வானம் நீலநிறம்இ பனி வெள்ளைநிறம்
  • நிறங்களை அடிப்படையாகக் கொண்ட சிறுவர் பாடல்களைப் பாடலாம். அவ்வாறு பாடும் போது படங்களைக் காட்டிப் பாட வேண்டும்.
  • காணொளிகளில் வரும் காட்சிகளில் நிறங்களைக் காட்டிக் கதைக்கலாம்:
    இவ்வாறு விளையாட்டு ரீதியாகக் கதைத்து விளையாடும் போது சிறுவர்கள் விரைவில் நிறங்களைக் கற்று விடுவார்கள்.
nafo logo Innholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   - www.morsmal.no