nafo
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Flerspråklige fortellinger
Matematikk begreper
Veiledning till foreldre
Skolekassa
Tospråklige undervisningsopplegg
Lumbrikus
NAFOs filmer

ஐரோப்பாவும் எனது தாய் தந்தையர் நாடும்

Tema: Europa og opprinnelsesland

Opplegget kan brukes fra 6. til 10. klasse og er tverrfaglig.

Dette opplegget tar utgangspunkt i et kompetansemål i samfunnsfag der elever skal
sammenligne land i Europa med land i andre verdensdeler. Opplegget kan lett
knyttes til elevenes opprinnelsesland. Se film om reiselivsmesse:
http://www.skoleipraksis.no/flerkulturell-opplering/filmer/stinta-et-mangfold/1

ஆசிரியர் முன்ட்டியே இது தொடர்பான இணையத்தளங்களையும் இணைப்புக்களையும் இலக்கியங்களையும் தேடி வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் தமது நாட்டைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். இப் பாடத்திட்டம் சமூகக்கல்வி தொடர்புடையதால் ஆசிரியர், இருமொழியாசிரியர், அடிப்படை நோர்வேயிய மொழி ஆசிரியர் வரும் சேர்ந்து தேவையான முக்கியமான சொற்கள், அதன் கருத்துக்கள் போன்றவற்றுடன் வேலை செய்யலாம்.


பின்வருமாறு செயற்பாட்டை செய்யமுடியும்:

  •  மாணவன் தனது தாய்நாட்டைப்பற்றி ஒரு ஆவணப்படம் ( விளக்கப் படம்) தயாரித்தல். ஆசிரியரும் மாணவரும் என்ன விடயங்கள் உள்ளடங்கியிருக்க வேண்டும் என்பதைக் கலந்துரையாடி ஒரு பட்டியல் தயாரிக்க வேண்டும்.
  •  அதே நேரம், ஆசிரியர் குறிப்பிட்ட விடயத்தில் உள்ள சொற்களுக்கு விளக்கம் அளித்து உதவிசெய்தல் வேண்டும்.
  •  மாணவன் சொற்களை தனது சொல்அகராதியில் எழுதி, அந்தச் செற்களுக்கு விளக்கம் எழுதி, அதற்கு நோர்வேயிய மொழி பெயர்ப்புச் செய்தல் வேண்டும்.
  •  ஆசிரியர் மாணவர்களுக்கு வௌ;வேறு வகையான வாசிப்பு முறைகளைப் பற்றிக்ற வேண்டும். வேகமாக வாசித்தல், மேலோட்டமாக வாசித்தல், விடயங்களைத் தேடி வாசித்தல் போன்ற வாசிப்பு வகைகளைப் பயன்படுத்தி தேவையான தகவல்களைச் சேகரித்தல். தேவையான தகவல்கள் எவை தேவையற்ற தகவல்கள் எவை எனப்பிரித்தறிதல் மிகவும் கடினமாக இருக்கும். எனவே மாணவர்கள் இதில் வௌ;வேறு கற்றலுத்திகளை (கற்றல்முறைகளை)க் கையாளப் பழகவேண்டும்.
  •  மாணவர்கள் தமது நாட்டைப் பற்றிய தகவல்களை புத்தகங்களிலும் இணையத்தளத்திலும் இருந்து சேகரிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட முக்கிய சொற்கள் ஆவணப்டத்துள் உள்ளடக்கப்பட வேண்டும்.
  •  படங்களுக்கும் காட்சிகளுக்கும் தகுந்த குறிப்புக்கள் எழுதப்பட வேண்டும்.
  •  மாணவர்கள் தமது ஆவணப்படத்தை ஆசிரியர்கள், சகமாணவர்களுக்கு முன், முன்மாதிரியான சமர்ப்பணம் செய்வதன் லம் அதன் உள்ளடக்கம், வடிவமைப்பு, சமர்ப்பிக்கும் முறை பற்றி ஆசிரியர், சகமாணவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளலாம்.
  •  ஆசிரியர், சகமாணவர்களின் கருத்துக்களை உள்வாங்கி தேவையேற்படின் ஆவணப்படத்தின் உள்ளடக்கத்தை மாற்றியமைத்து பெற்றோர், அதே பாடசாலையில் உள்ள தமதுமொழி பேசும் மற்றைய தர மாணவர்கள் முன் சமர்ப்பிக்கலாம்.
  •  ஆவணப்படத்தை நோர்வேயிய மொழியில் மொழிபெயர்த்து தமது வகுப்பு மாணவர்களின் முன் ஒப்பிக்கலாம் (சமர்ப்பிக்கலாம்).
  •  

nafo logo Innholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   - www.morsmal.no