Froskeprinsessen // தவளையும் இளவரசியும்

Denne fortellingen handler om en frosk og en prinsesse. En frosk hjalp en prinsesse med å hente en gullball som hun mistet i havet. Som en belønning ville frosken spise og sove sammen med prinsesse i tre dager. Etter tre dager opphørte en forbannelse som frosken var utsatt for og frosken ble en prins. Så levde de lykkelige alle sine dager.                                  

 

 

முன்னொரு காலத்தில் ஓர் அழகான இளவரசி ஆற்றங்கரையிலிருந்து தனக்கு மிகவும் பிடித்த தங்கப் பந்துடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அப்பந்து கை தவறி ஆற்றிற்குள் விழுந்து விட்டது. இளவரசி விக்கி விக்கி அழுத் தொடங்கி விட்டது.

 

அப்போது ஓர் அசிங்கமான தவளை ஒன்று இளவரசி முன்பு வந்தது. 

அது இளவரசியிடம் “இளவரசியே ஏன் அழுகிறீர்கள்” எனக் கேட்டது. இளவரசியும் தனது பந்து ஆற்றில் தொலைந்து விட்டது எனக் கூறினாள். தவளை: “ நான் தங்களிற்கு உதவி செய்யட்டுமா? எனக் கேட்டது.
இளவரசி: நீ ஒரு தவளை எவ்வாறு எனக்கு உதவி செய்வாய்? எனக் கேட்டாள். தவளை: நான் உங்களிற்கு உதவி செய்தாள், நீங்கள் எனக்கு உங்கள் உணவுத் தட்டில் உணவும், படுக்கையில் இடமும் 3 நாளைக்குத் தரவேண்டும் எனக் கூறியது. இளவரசியும் சம்மதிப்பது போல் நடித்தாள். தவளையும் ஆற்றில் குதித்து பந்துடன் வெளியே வந்தது. பந்தை வாங்கிய இளவரசி நன்றி கூடக் கூறாமல் அரண்மனைக்கு ஓடி விட்டாள்.
இரவாகியதும் உண்பதற்காக தந்தை, தாயுடன் இளவரசியும் உட்கார்ந்தாள். அந்தநேரம் பார்த்து கதவில் யாரோ தட்டுவது கேட்டது. கதவைத் திறந்ததும் அங்கே தவளை நின்று கொண்டிருந்தது. தவளையைக் கண்டதும் இளவரசிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. கூறினாள். தந்தையோ கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் எனக் கண்டிப்பாகக் கூறிவிட்டார்.
தவளையும் இளவரசியின் உணவுத் தட்டில் உண்டது. அதன் பின்பு இளவரசியின் படுக்கையில் படுத்தது. இளவரசிக்கோ என்ன செய்வதென்றே தெரியவில்லை. இந்த அசிங்கமான தவளையை எப்படித் துரத்தலாம் என யோசித்தவாறு இருந்தாள். அப்போது தவளை இனிமையான பாடலொன்றைப் பாடியது. பாடலைக் கேட்டவாறே இளவரசி தூங்கி விட்டாள். மறு நாள் எழுந்து பார்க்கையில் தவளையைக் காணவில்லை.
இதே போல் மறுநாளும் தவளை வந்தது. உணவு உண்டு விட்டு இளவரசியின் படுக்கையில் சென்று படுத்தது. அவளுக்காக ஒரு பாடல் பாடியது. இளவரசியும் பாடலைக் கேட்டவாறே தூங்கிவிட்டாள். மறு நாள் எழுந்து பார்க்கையில் தவளையைக் காணவில்லை.
இளவரசிக்கோ தவளையைக் காணவில்லையே என கவலையாக இருந்தது. இந்தத் தவளை நன்றாகப் பாடுகின்றதே, மிகவும் நல்ல நண்பன் போலுள்ளது என தவனையை நினைந்து கவலைப்பட்டாள். எப்போது இரவு வரும் எனக் காத்திருந்தாள். இரவாக தவளையும் வந்தது. வழமை போல் இரவு உணவை உண்டபின் இளவரசியுடன் உறங்கச் சென்றது. .இளவரசியும் மகிழ்ச்சியுடன் தவளையுடன் கதைத்துச் சிரித்தாள். அதன் பின் தவளையும் இனிமையான பாடலைப் பாட இளவரசியும் உறங்கிவிட்டார்.
மறுநாள் எழுந்து பார்க்கையில் தவளையைக் காணவில்லை. ஆனால் அங்கே மிகவும் அழகான ஓர் இளவரசன் படுத்திருப்பதைக் கண்ட இளவரசி திடுக்கிட்டு எழுந்தாள். நீ யார்? எனக் கேட்டாள்.
இளவரசரும் தான் ஓர் சாபத்தினால் தவளையானதாகவும், மீண்டும் இளவரசனாக மூன்று நாட்கள் ஓர் இளவரசியுடன் உணவு உண்டு, ஒரே படுக்கையில் உறங்கினால் மட்டுமே மீண்டும் இளவரசராக முடியும் எனவும், அதனாலேயே அவ்வாறு செய்ததாகவும் கூறினார். அத்துடன் இளவரசரும்; தன்னை திருமணம் செய்ய விருப்பமா? என இளவரசியிடம் கேட்டார். இளவரசியும் சம்மதித்தாள்.
இருவருக்கும் இனிதே திருமணம் நடைபெற்றது. மிகவும் மகிழ்ச்சியாக நீண்ட காலம் வாழ்ந்தார்கள்
.