Den lettlurte mannen // கந்தனும், மோசக்காரர்களும்

Illustrasjon: PixabayDenne fortellingen handler om en mann som var veldig lettlurt og ble derfor lurt av mange andre mennesker. Han prøvde å være klok, men det endte opp med at ble han lurt  igjen. 

 

ஓரு கிராமத்தில் கந்தன் என ஒருவன் இருந்தான். அவன் கிராமத்தில் உள்ள அனைத்து பெரியோர்,சிறியவர்களிடம் ஏமாறுவது வழக்கம். அவன் கெட்டிக்காரனாக மாற எவ்வளவு முயற்சி செய்தாலும் யாராவது ஒருவன் அவனை முட்டாளாக மாற்றுவது வழக்கமாய் இருந்தது

 

ஓரு நாள் கந்தன் சந்தைக்கு தன் குதிரையையும் ஆட்டையையும் விற்கச் சென்றான். ஆட்டின் கழுத்தில் இருந்த பட்டையில் மணி ஒன்றை கட்டித் தொங்கவிட்டான்.குதிரையின் வாலுடன் ஒரு கயிற்றைக் கட்டி ,அதன் மறுமுனையை ஆட்டின் கழுத்துப் பட்டையுடன் சேர்த்து கட்டினான். பின்பு அவன் குதிரையின் மேலே ஏறி சந்தைக்குச் சென்றான்.
அவன் முட்டாள் என அறிந்த சில மோசக்காரர்கள் அவனை பின் தொடர்ந்தனர். மோசக்காரர்களில் ஒருவன் மணியை அக்; குதிரையின் வாலுடன் கட்டி விட்டு ஓடிவிட்டான். குதிரை வாலுடன் கட்டியிருந்த மணியோசையைக் கேட்டுக் கொண்டு சென்ற கந்தன் ஆடு தன்னைப் பின்தொடருவதாக எண்ணினான்.
சிறிது நேரத்தின் பின்பு மற்றோர் மோசக்காரன் கந்தனை நிறுத்தி “வயோதிபரே”ஏன்? குதிரையின் வாலில் மணியைக் கட்டி இருக்கின்றீர்கள் என்று கேட்டான். பின்னே பார்த்த கந்தன் ஆடு காணாமை கண்டு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தான்.
இதற்குள் மூன்றாவது மோசக்காரன் வந்தான். கந்தனிடம் ஐயா! வரும் வழியில் உங்கள் ஆட்டுடன் ஒருவன் நிற்பதைக் கண்டேன் என்றான்.நீங்கள் விரும்பினால்,நான் உங்கள் குதிரையின் மீது ஏறிச்சென்று ,திருடனை பிடித்து வருகின்றேன் என்றான்.
இதனை நம்பிய கந்தன் குதிரையின் மீது இருந்து கீழே இறங்கி,அதை மோசக்காரனிடம் கொடுத்தான்.மோசக்காரனோ கந்தனுக்கு வணக்கம் சொல்லிவிட்டு ,அங்கு இருந்து விரைவாகச் செக்றான்.
கந்தன் தன் பிராணிகளுக்காக வெகு நேரமாக காத்திருந்தான். கடைசியில் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினான்.