Den gamle pelikanen // வயதான கொக்கு

Foto: PixabayDenne fortellingen handler om en gammel pelikan som delte ut maten sin uten å spare noe til seg selv.

 

 

ஒரு ஊரில் ஓரு  வயதான கொக்கு  ஒன்று இருந்தது. கொக்கிற்கு பல மணி நேரம் பறந்து செல்வதற்கு பலமில்லை. அது மிகவும் வயசானதால் அது ஒரு பனை மரத்தின் மேல் குடியிருந்தது. அந்த மரத்தின் கீழ் ஓர் சிறிய ஏரி இருந்தது. அந்த ஏரியில் தனது பசிக்கு மீன்களை பிடித்து உண்பது வழக்கம். அந்த ஏரி மிகவும் சிறியது. எனினும் அதன் பசியை போக்கக் கூடிய அளவிற்கு மீன்கள் இருந்தன.

 

கொக்கு தான் எல்லோரிற்கும் சேவை செய்ய வேண்டும் என விருப்பியது. ஒரு நாள் அவ் வழியே பல இளம் கொக்குக்கள் பறந்து சென்றன. அதனைக் கண்ட கொக்கு மிகவும் ஆனந்தமாக தனது இருப்பிடத்திற்கு வருமாறு அழைத்தது.
ஆனால் அந்தக் கொக்குக் கூட்டத்தின் தலைவனோ இந்த வயதான கொக்கின் நிலையை அறிந்து கொண்டது. அதனால் வயதான கொக்கிடம் அழைப்பிற்கு நன்றி எனவும் தம்மை போக விடுமாறும் கூறியது. ஆனால் இந்த வயதான கொக்கோ தனது பெருமைகளைக் கூறுவதற்காக தலைவன் கூறுவதை செவிமடுக்கவேயில்லை.
மற்றைய இளம் கொக்குகளும் தம்மைப் போக விடுமாறு கூறின. ஆனால் வயதான கொக்கோ மீண்டும் மீண்டும் தமது பெருமைகளை தம்பட்டம் அடிப்பதிலேயே கவனம் செலுத்தியது. இதற்கு மேலும் கதைத்துப் பயனில்லை என அறிந்த கொக்குகள் ஏரியில் இறங்கி வயிராற உண்டு மகிழ்ந்தன. ஏரியில் இருந்த மீன்கள் எல்லாவற்றையும் போட்டி போட்டு உண்டு முடித்தன.
மறுநாள் காலை அவை விடை பெற்றுச் சென்றன. இளம் கொக்குகள் வயதான கொக்கிற்கு வரப் போகும் துன்பத்தை நினைத்துக் கவலையுடன் விடை பெற்றன. முன் கூட்டியே எதையும் யோசியாத வயதான கொக்கு உணவு உண்பதற்காக ஏரிக்கு வந்தது. ஏரியோ ஒரு மீன் கூட இல்லாமல் வறண்டு போய்க் கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டது.
“ஐயோ பாவம்” யாரால் என்ன செய்ய முடியும். “தனக்குப் பின் தான் தானமும் தருமமும்” என்பது அப்போது தான் புரிந்தது. புரிந்து என்ன பலன் பசி தாங்க முடியாது கொக்கு இறந்து போனது.