Askeladden og de gode hjelperne // அஸ்கலாடன்

Foto: PixabayAskeladen og de gode hjeperne

முன்னொரு காலத்தில் ஒரு அரசன் தனது அழகான  மகளுடன் ஒரு நாட்டை ஆட்சி செய்து வந்தான். அந்த அரசன் தனது நாட்டிலிருக்கும் மக்களிற்கு ஒர் அறிவித்தலை விடுத்தான். ஒரு அழகான கப்பலைக் கட்ட வேண்டும். அந்தக் கப்பல் தரையிலும் காற்றிலும் தண்ணீரிலும் ஓட வேண்டும். அப்படியான கப்பலை செய்து கொண்டு வருபவருக்கு தனது அழகான மகளைத் திருமணம் செய்து தருவதுடன் தனது பாதி இராட்சியத்தையும் தருவதாக அறிவித்தான்.

 

அந்த நாட்டில் மூன்று சகோதரர்கள் வசித்து வந்தார்கள். மூத்தவன் பெயர் பெல். இரண்டாவது சகோதரனின் பெயர் போல். மூன்றாவது சகோதரனின் பெயர் அஸ்கலாடன். அவர்கள் மன்னனின் அறிவித்தலைக் கேட்டனர். முதலில் பெல் என்பவனும்;இ போல் என்பவனும்; கப்பலைச் செய்து அரசனின் மகளைத் திருமணம் செய்ய நினைத்தார்கள். அவர்கள் தமக்கு உண்பதற்கு உணவுப் பொதியையும்இ வெட்டுவதற்கு ஒரு பெரிய கோடலியை எடுத்துக் கொண்டு காட்டிற்குப் புறப்பட்டார்கள். காட்டிற்குள் செல்லும் வழியில் ஓர் ஏழை வயதானவனைக் கண்டார்கள்.

அந்த வயதானவர் எங்கே செல்கிறீர்கள் எனக் கேட்டார். நாங்கள் தொட்டில் செய்ய மரம் வெட்டப் போகிறோம் என்றனர். அந்த வயதானவரும் அப்படியே ஆகட்டும் என்றார். பின்பு அவர்களின் உணவுப் பொதியைக் காட்டி அதற்குள் என்ன இருக்கிறது எனக் கேட்டார். அவர்கள் அப் பொதிக்குள் சாணம் இருக்கிறது என்று கூறினர். அந்த வயதானவரும் அப்படியே ஆகட்டும் என்று கூறினார். இருவரும் வயதானவரை ஏமாற்றியதை நினைத்துச் சிரித்துக் கொண்டே காட்டிற்குள் சென்றனர்.

கப்பல் செய்வதற்காக மரங்களை வெட்டி வெட்டி அடுக்கினர். ஆனால் அந்த மரங்கள் எல்லாம் சின்னத் தொட்டில் மாதிரியே ஆனது. நன்றாக களைத்து விட்டதால் உணவு உண்ண நினைத்தனர். உணவுப் பொதியை திறந்த போது உணவெல்லாம் சாணமாக மாறி இருந்தது. இருவரும் பசியோடும் களைப்போடும் வீடு திரும்பினார்கள்.

அஸ்கலாடன் தானும் காட்டிற்குப் போய் கப்பல் செய்து இளவரசியைத் திருமணம் செய்ய எண்ணினான். உணவுப் பொதியை எடுத்துக்கொண்டு காட்டிற்குப் புறப்பட்டான். போகும் வழியில் ஏழையான வயதானவரைக் கண்டான். அந்த வயதானவர் எங்கே செல்கிறாய் எனக் கேட்டார். நான் கப்பல் செய்து இளவரசியை மணம் செய்யப் போகிறேன் என்றான். பொதிக்குள என்ன இருக்கிறது எனக் கேட்டார் வயதானவர். அவனும் அதற்குள் உணவு இருக்கிறது எனக் கூறினான். எனக்கும் கொஞ்சம் உணவு தருகிறாயா? என்றார். ஆம் நன்றாகச் சாப்பிடுங்கள் என்று தனது உணவுப் பொதியைக் கொடுத்தான்.

உணவை இருவரும் உண்ட பின்பு அஸ்கலாடனை நன்றாகப் படுத்து உறங்குமாறும் தான் கப்பல் செய்து தருவதாகவும் வயதானவர் கூறினார். அஸ்கலாடனும் மரத்தின் கீழே படுத்து உறங்கி விட்டான். மறுநாட்காலை விடிந்ததும் வயதானவர் அஸ்கலாடனை எழுப்பினார். அங்கு ஓர் அழகான கப்பல் செய்யப்பட்டிருந்தது. அந்தக் கப்பல் அரசன் கேட்டது போல் நிலத்திலும்இ வானத்திலும்இ நீரிலும் ஓடக் கூடியது. அஸ்கலாடனும் நன்றி தெரிவித்து விட்டு கப்பலில் ஏறினான். வழியில் காண்பவர்களையும் ஏற்றிச் செல்லுமாறு வயதானவர் கூறினார். அப்படியே செய்கிறேன் எனக் கூறி வி;ட்டு கப்பலை ஓடிச் சென்றான்.

வழியில் மெலிந்த ஒருவன் எந்நேரமும் பசிப்பதால் பசி தாங்க முடியாமல் கற்களை சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டான். இன்னுமொருவன் மிகவும் வேகமாக ஓடுவதால்; காலில் ஏழு இரும்புக் குண்டுகளைக் கட்டியிருந்தான். மற்றொருவன் தனது பனிக்காலத்தையும்இ கோடை காலத்தையும் தனது உடம்பில் வைத்திருந்ததால் தனது வாயைப் பொத்திக் கொண்டிருந்தான். இவர்களை அஸ்கலாடன் தனது கப்பலில் ஏற்றிக் கொண்டு அரசமாளிகைக்குப் போனான்.

அரசனுக்கோ அஸ்கலாடனுக்கு தனது மகளை திருமணம் செய்து வைக்கவோஇ நாட்டில் பாதியைக் கொடுக்கவோ விருப்பமில்லை. அதனால் அரசன் இன்னும் மூன்று கடும்பரீட்சையில் வெல்ல வேண்டும் என்று கூறினான். அஸ்கலாடனும் சம்மதித்தான்.

முதலாவதாக வீடு நிறைய உணவு வைக்கப்பட்டிருந்தது. இவ்வளவு உணவையும் இன்றே உண்டு முடிக்க வேண்டும் என்று அரசன் கூறினான். அஸ்கலாடன் இவ்வளவு உணவையும் எவ்வாறு உண்ண முடியும் என யோசித்தான். வழியில் கண்டு ஏற்றி வந்தவர்களில் எந்நேரமும் பசியோடு இருப்பவன் தான் உதவி செய்வதாகக் கூறினான். சிறிது நேரத்திலேயே முழு உணவையும் சாப்பிட்டு முடித்து விட்டான்.

அரசன் இரண்டாவது போட்டியாக ஊரின் எல்லையில் தண்ணீர் இருக்கிறது. அதனை விடிவதற்குள் எடுத்து வரவேண்டும் எனக் கூறினான். கப்பலில் ஏற்றி வந்தவனின் மிக விரைவாக ஓடுபவன் தான் உதவி வெய்வதாகக் கூறினான்.மிக விரைவாக ஓடிச் சென்று தண்ணீரைக் கொண்டு வந்தான்.

அரசன் மூன்றாவதாக கடும் போட்டி ஒன்றை வைத்தான். ஓர் தீ மூட்டிய வெக்கையான அறைக்குள் விடியும் வரை இருக்க வேண்டும் எனக் கூறினான். அஸ்கலாடனோ இதற்குள் எப்படி இருப்பது எனக் கவலைப்பட்டான். தனது உடம்பில் பனிகாலத்தையும்இ கோடைகாலத்தையும் வைத்துக் கொண்டு வாய் பொத்தி இருந்தவன் தான் உதவி செய்வதாகக் கூறினான். வெக்கையான அறைக்குள் குளிரையும் வெக்கையையும் மாறி மாறி வரவைத்தான். இருவரும் சுகமாக அறைக்குள் இருந்தனர். காலையில் வந்து அறையைத் திறந்த அரசன் அஸ்கலாடன் உயிரோடு இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டான்.

எதுவுமே செய்ய முடியாததால் அரசன் தனது மகளை அஸ்கலாடனுக்கு திருமணம் செய்து வைத்ததுடன் தனது இராச்சியத்தில் அரைவாசியையும் கொடுத்தான். அஸ்கலாடன் இளவரசியுடன் இன்பமாக வாழ்ந்தான்.