nafo
Tamil - தமிழ்
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Flerspråklige fortellinger
Matematikk begreper
Veiledning till foreldre
Tospråklige undervisningsopplegg
Tospråklig materiell

நோர்வேயின் பிறந்ததினம்

  norgeHer står det om 17. mai feiring i barnehagen og om hvordan voksne kan kommunisere med barn om norges frigjøring.

நோர்வேயின் பிறந்ததினம் நோர்வேயிலுள்ள அனைத்து மழலையர் பள்ளிகளிலும் நோர்வேயின் சுதந்திரதினத்தைக் கொண்டாடுவர். சிறுவர்களுக்கு சுதந்திரதினத்தைப்பற்றி விளக்கிக் கூறுவது கடினம். இதனால் இந்நாளை நோர்வேயின் பிறந்ததினம் என்றே கூறுவது வழக்கமாக உள்ளது. நோர்வே தான் விரும்பியதைச் தானே செய்யக் கூடிய அதிகாரம் கிடைத்த நாள் எனவும் விளங்கக் கூடிய சிறுவர்களுக்குக் கூறலாம்.

மழலையர் பள்ளிச்சிறுவர்களுக்கு இந்நாளைப் பற்றிய அடிப்படை விளக்கம் கொடுக்கப்படுவதில்லை. எனினும் இந்நாளில் அரச குடும்பத்தினர் மக்களுக்கு கை காட்டி வணக்கம் தெரிவிப்பர். மக்கள் தமது குடும்பத்தினருடன் இணைந்து உண்டு கழிப்பர். தமது அழகான கலாச்சரர ஆடைகள் அணிவர். பிள்ளைகள் பலூன், ஐஸ்கிறீம் வாட்டிய இறைச்சி வகைகள் என உண்டு மகிழ்வர். இசைக் கருவிகள் பலவற்றை இசைத்து அணிவகுத்துச் செல்வர் போன்ற விடயங்களைக் கூறலாம்.
சிறுவர்களின் மன, உடல் வளர்ச்சியின் அடிப்படையில் கைவினைச் செயற்பாடுகள் செய்யலாம். இச் செயற்பாடுகளில் நோர்வேயின் கொடியைக் காட்டி அது போல் வரைய அல்லது வர்ணம் தீட்ட விடலாம். வர்ணம் தீட்டும் போது மிகவும் அழகாக இருக்க வேண்டும் என்பதை விட சிறுவர்களுக்கு சிவப்பு, நீலம், வெள்ளை போன்ற வர்ணம் கொண்டதே நோர்வேயின் கொடி என்ற அடிப்படை அறிவு வந்தாலே போதுமானது. அத்துடன் இந்த மூன்று வர்ணங்களையும் பயன்படுத்தி பலவிதமான கைவினைப் பொருட்கள் தயாரிக்கலாம். நோர்வேயிய தேசிய கீதத்தினைப் பாட வேண்டும். சிறுவர்களுக்கு பாடல் மனப்பாடமாக வராது விடினும் இப்பாடலைக் கேட்கும் போது இது நோர்வேயின் பிறந்ததினப் பாடல் என்று தெரிந்தாலே போதுமானது. பெற்றோர்கள் தமது குழந்தைகளுடன் இணைந்து உணவு தயாரிக்கலாம். அரசகுடும்பத்தினரை நேரடியாக அல்லது தொலைக்காட்சியில் காட்டலாம். அருகிலுள்ள பாடசாலைகளில் நடைபெறும் இசை அணிவகுப்புக்கு அழைத்துச் செல்லலாம். சிறுவர் விளையாட்டுக்களில் கலந்து கொள்ள வைக்கலாம். மே.17 என்பது நோர்வேயின் பிறந்தநாள் என்று சிறுவர்களுக்கு தெரியப்படுத்துவதுடன் இந்நாள் நோர்வேயில் வாழும் மக்கள் யாவருக்கும் இன்பமான நாள் என சிறுவர்கள் அறிந்திருக்கும் வகையில் செயற்படுதல் நன்று.

nafo logo Innholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   - www.morsmal.no