Sang om kroppsdeler // மனித உடல் உறுப்புகள்
குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே உடல் உறுப்புக்களின் பெயரை தமிழில் காட்டிக் கதைக்கும் போது அவர்கள் இலகுவில் கூறத் தொடங்கி விடுவார்கள்.
குழந்தைகளின் உறுப்புக்களைக் காட்டி பெயர்களைக் கூறலாம். பின்பு நாம் பெயர்களைக் கூற அவர்களைத் தொட்டுக் காட்டும்படி கூறலாம்.
படங்களைக் காட்டிக் கதைக்கலாம். கேட்கலாம்.
உறுப்புகள் சம்பந்தமான பாடல்களைப் பாடலாம். உதாரணமாக பெருவிரலே பெருவிரலே எங்கே இருக்கிறாய், பொம்மை நல்ல பொம்மை, கை வீசம்மா கை வீசு,..
மனித உடலை உறுப்புகள் இல்லாமல் கீறவும். அதில் உறுப்புகளை நீங்கள் சொல்லச் சொல்ல குழந்தைகளை கீறச் சொல்லாம். அல்லது நீங்கள் கீறி வெட்டி வைத்திருக்கலாம். அதனை குழந்தைகளை ஒட்டச் சொல்லலாம்.
கணனியில் குழந்தைகளைக் கீற விடலாம். குழந்தைகளுக்கான உறுப்புகள் சம்பந்தமான காணொளிகளைப் பார்க்க விடலாம் .kroppsdeler