Ånden i flasken // புத்திமான் பலவான்

Ill:AdobeStockEn liten gutt fant en flaske som fløyt i havet. Da gutten åpnet flasken kom det en ånd fra den. Ånden ville spise gutten. Gutten klarte å lure ånden og låse den inn i flasken igjen.

 

 

ஒரு ஊரில் ஒரு சிறுவன் இருந்தான். அவன் மிகவும் புத்திசாலியாவான். அவன் ஒரு நாள் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அக் கடலில் ஏதோ ஒன்று மிதந்து வருவதைக் கண்டான். எதுவாக இருக்கும் எனக் கிட்டச் சென்று பார்த்தான். அங்கே ஒரு போத்தலைக் கண்டான். அந்தப் போத்தலை தூக்கினான். ஆனால் போத்தலைத் தூக்க முடியவில்லை. அப் போத்தல் மிகவும் கனமாக இருந்தது. அதனைத் துறக்க முயன்றான்.

 

ஆனால் துறக்க முடியவில்லை. மிகவும் முயற்சித்து அதனைத் திறந்து விட்டான்.
அப்போது அப் போத்தலிலிருந்து பென்னம் பெரிய பூதம் ஒன்று வெளியே வந்தது. பூதத்தைக் கண்டதும் அச் சிறுவன் பயத்தால் நடுநடுங்கினான். பூதமோ அவன் அருகில் வந்து அவனைப் பிடித்து உண்ணப் போனது. அச் சிறுவனிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.அவன் மிகவும் புத்திசாலியாவான். இந்தப் பூதத்திடம் போராடி வெல்ல முடியாது என நன்றாகவே புரிந்து கொண்டான். எப்படித் தப்பிக்கலாம் என யோசித்தான். உடனே அவனுக்கு நல்ல யோசனை தோன்றியது. அவன் அருகில் வந்த பூதத்திடம் “பூதமே பூதமே” நான் உனக்கு போத்தலிலிருந்து வெளியே வர உதவி செய்தேன். அதனால் நீ என்னை உண்பதற்கு முதல் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி விட்டுத் தான் உண்ண வேண்டும் என கண்டிப்பாகக் கூறினான்.
பூதமும் சரி என ஒப்புக் கொண்டது. பூதமே…நீ எவ்வாறு இந்தச் சிறிய போத்தலிற்குள் இருந்தாய் என ஒரே ஒரு முறை எனக்குக் காட்டி விட்டு என்னை உண்ணலாம் எனக் கூறினான். பூதமும் எவ்வாறு தான் போத்தலிற்குள் இருந்ததெனக் காட்ட மீண்டும் சிறிதாகி போத்தலிற்குள் புகுந்தது. உடனே அச் சிறுவன் மூடியை எடுத்து போத்தலை இறுக்கி மூடி விட்டான். பின்பு அந்தப் போத்தலை எடுத்து மீண்டும் கடலுக்குள் எறிந்து விட்டு நிம்மதியாக வீட்டிற்குத் திரும்பினான்.