Lille larve aldri mett // வயிறு நிறையாத புழு

Ill:AdobeStock

Dette er historien om  lille larven aldri mett- på tamil 

ஒருநாள் இரவு வானத்தில் நிலவு தெரிந்தது. அந்த நிலவு வெளிச்சத்தில் .இலை ஒன்றில் ஓர் சிறிய முட்டை இருந்தது. இரவு முழவதும் அந்த முட்டை இலையிலேயே இருந்தது. மறு நாள் காலை கதிரவன் உதித்தது. கதிரவனின் ஒளியால் அந்தச் சிறிய முட்டை சூடாகியது. வெயிலின் சூடுபட்டதால் முட்டை வெடித்தது. முட்டையில் இருந்து ஒரு சிறிய புழு ஒன்று வெளியே வந்தது.

அந்தப் புழவிற்கு மிகவும் பசித்தது. அது உணவு தேடிச் சென்றது. புழுவானது
திங்கட்கிழமை 1 அப்பிள் பழம் உண்டது.
செவ்வாய்க்கிழமை 2 பேரிக்காய்ப்பழம்; உண்டது.
புதன்கிழமை 3 புளும்ம பழம் உண்டது.
வியாழக்கிழமை 4 சிவப்புச் செரிப்பழம் உண்டது.
வெள்ளிக்கிழமை 5 தோடம்பழம் உண்டது.
சனிக்கிழமை மெதுவெதும்பி,பாற்கட்டி,வெல்லரிக்காய், பனிக்கூழ்,அரைத்தஇறைச்சி, சூப்புத்தடி, குண்டுவெதும்பி, பழவெதும்பி, குழாய்இறைச்சி, கெக்கரிப்பழம் எல்லாம் உண்டது. நிறைய உண்டதால் வயிறு வலிக்கத் தொடங்கியது. ஒரு இலையை உண்டது. வயிற்று வலி மாறிவிட்டது.
இப்போது புழு மிகவும் பெரிதாகி விட்டது. ஒரு பெரிய கூடு ஒன்றைக் கட்டியது. அந்தக் கூட்டில் இரண்டு கிழமை தூங்கியது. நித்திரை விட:டு எழுந்ததும் ஒரு துவாரம் இட்டு வெளியே வந்தது. இப்போது புழு வளர்ந்து ஒரு அழகான வண்ணத்துப்பூச்சியாகிப் பறந்து போனது.
,