Fortelling // ஐந்து முட்டாள் சீடர்களும் குருவும்

Illustrasjon: PixabayFortelling om en dum lærer og fem elever

 

 

De skulle reise til en annen by og måtte gjennom en elv for å gjøre dette. Læreren sier at elven kan være farlig og at de måtte vente helt til elven sovner. Læreren sier at de måtte tenne på ved og putte dette i vannet for å se om elven var våken. Når de hørte at fyret på veden slukket, sa læreren at elven fortsatt var våken. Etter en liten stund puttet de det slukkede vedet i vannet og hørte ingenting. Da tenkte de at elven hadde sovnet og gikk derfor gjennom. Elevene skrøyt over læreren om at han var så flink.

 

ஒரு ஊரில் ஒரு முட்டாள் குரு தனது ஐந்து சீடர்களுடன் வசித்து வந்தார். இவர்கள் ஒரு நாள் வேறு ஊருக்குப் போக வேண்டி இருந்தது. அங்கே ஒரு குளம் இருந்ததால் அந்தக் குளத்தைக் கடந்து மறுபக்கம் செல்வது எப்படி என யோசித்தனர்.
இந்தக் குளம் முன்பு ஒருவனை விளுங்கி விட்டது. அதனால் நாம் மிகவும் கவனமாக இதனைக் கடக்க வேண்டும். நாம் குளம் தூங்கும் வரை காத்திருக்க வேண்டும் எனக் குரு கூறினார். அவர்கள் இரவாகும் வரை காத்திருந்தனர். இரவாகியதும் ஒரு சீடன் எவ்வாறு குளம் தூங்கி விட்டது எனத் தெரியும் எனக் கேட்டான். குருவும் ஒரு சீடனைக் கூப்பிட்டார். ஒரு தீப்பந்தத்தை அவனது கையில் கொடுத்தார். இதனைக் கொண்டு சென்று தண்ணீருக்குள் வைக்கவும் என்றார்.
அவனும் தீப்பந்தத்தைக் கொண்டு சென்று தண்ணீருக்கள் வைத்தான். தீப்பந்தம் “ஸ்ஸ்ஸ..”; என்ற சத்தத்தடன் அணைந்தது. குளம் தூங்கவில்லை எனக் கத்திக் கொண்டே எல்லோரும் ஓட்டம் பிடித்தனர். மீண்டும் சிறிது நேரம் காவலிருந்தனர். சிறிது நேரத்தில் குரு ஒரு சீடனைக் கூப்பிட்டு அணைந்த தீப்பந்தத்தைக் கொடுத்தார். அந்தத் தீப்பந்தத்தைக் கொண்டு சென்று குளத்தில் வைக்கும் படி கூறினார்.
சீடனும் தீப்பந்தத்தை குளத்தில் வைத்தான். அதிலிருந்து எந்தச் சத்தமும் கேட்கவில்லை. எல்லோரும் குளம் தூங்கிவிட்டது என நினைத்து பயமின்றிக் குளத்தைத் தாண்டினர்.குரு மிகவும் புத்திசாலி என நினைத்து சீடர்கள் அவரைப் பாராட்டினர்.