Fluen // பெயரை மறந்த ஈ
Fortelling om en flue som glemte navnet sitt
Denne fortellingen handler om en flue som glemte navnet sitt. For å finne ut om hva navnet til fluen var, så måtte fluen fly rundt og spørre forskjellige dyr. Det siste dyret hjalp fluen med å finne navnet sitt.
ஒரு ஈ தனது பெயரை மறந்து விட்டது.
ஈ ஒரு நாயைக் கண்டது.
எனது பெயரை மறந்து விட்டேன். உதவி செய்கிறாயா? என்றது.
நாய் வள் வள் என்றது. இது எனது பெயரில்லை என ஈ பறந்து போனது.
ஈ ஒரு பூனையைக் கண்டது.
எனது பெயரை மறந்து விட்டேன். உதவி செய்கிறாயா? என்றது.
பூனை மியாவ் மியாவ் என்றது.
இது எனது பெயரில்லை என ஈ பறந்து போனது.
ஈ ஒரு பசுவைக் கண்டது.
எனது பெயரை மறந்து விட்டேன். உதவி செய்கிறாயா? என்றது.
பசு மே மே என்றது.
இது எனது பெயரில்லை என ஈ பறந்து போனது.
ஈ ஒரு குதிரையைக் கண்டது.
எனது பெயரை மறந்து விட்டேன். உதவி செய்கிறாயா? என்றது.
குதிரை ஈ ஈ என்றது.
ஆம் ஞாபகம் வந்து விட்டது.
எனது பெயர் ஈ ஈ எனக் கூறிக் கொண்டு பறந்து போனது.