Løven og musa // சிங்கமும் எலியும்

Fortelling om en løve og en mus

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்த வந்தது. ஒருநாள் வயிறு நிறையச் சாப்பிட்ட சிங்கம் படுத்து உறங்கிக் கொண்டிருந்தது.அங்கு ஓர் புதர் இருந்தது. அந்தப் புதரில் ஒரு எலி வசித்து வந்தது. அந்த எலி புதரின் வெளியே வந்து காட்டினுள் சென்றது. அங்கே சிங்கம் ஒன்று படுத்திருப்பதைக் கண்டதும் அதன் மேல் ஏறி விளையாட ஆசைப்பட்டது.

சிங்கத்தின் மேல் ஏறித் துள்ளி விளையாடியது. ஆழ்ந்த உறக்கத்திலிருந்த சிங்கம் தூக்கம் கலைந்து எழுந்தது. மிகவும் சினத்துடன் கர்ச்சித்தது. தனது தூக்கத்தைக் கலைத்த எலியைக் கண்டது. எலியைப் பிடித்து குதறப் பார்த்தது. எலியோ பயந்து நடுங்கியது.
எலி சிங்கத்திடம் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியது. “என்னை விட்டுவிடுங்கள்;, நான் என்றோ ஒரு நாள் உங்களுக்கு உதவி செய்வேன்” எனக் கூறியது.

ng-love-mud
சிங்கமோ “நீயோ சின்னஞ்சிறு எலி. உன்னால் எனக்கு என்ன உதவி செய்ய முடியும். இன்று உன்னைப் போக விடுகிறேன். தப்பிப் போ. எனக்கூறி எலியைத் துரத்தி விட்டது. எலியும் தப்பினேன் பிழைத்தேன் என ஓடிப் போனது.
ஒரு நாள் சிங்கம் வேட்டைக்குப் போனது. அங்கு வேடன் வைத்த பொறியினுள் சிங்கம் மாட்டிக் கொண்டது. சிங்கம் பெரிதாகக் கர்ச்சித்தது. வலையை அறுக்க எவ்வளவோ முயற்சி செய்தது. சிங்கத்தால் முடியவேயில்லை.
சிங்கத்தின் கர்ச்சிக்கும் குரல் கேட்ட எலி அங்கே வந்தது. சிங்கம் வலைக்குள் அகப்பட்டிருப்பதைக் கண்டது. சிங்கத்தின் அருகில் ஓடி வந்து தனது சிறிய கூரிய பற்களால் வலையைக் கடித்துக் அறுத்து விட்டது.
சிங்கம் எலிக்கு நன்றி கூறியது. நீ சின்னவனாக இருந்தாலும் என்னுடைய உயிரைக் காப்பாற்றி விட்டாய். நாம் சிறியவர் தானே என குறைவாக யாரையும் நினைக்கக்கூடாது, என உணர்ந்து கொண்டேன். என சிங்கம் எலியிடம் மன்னிப்புக் கேட்டது.