Frihet // அடிமைக் குதிரைகள்
Denne fortellingen handler om frihet.
ஓர் ஊரில் காட்டின் அருகாமையில் உள்ள மலை அடிவாரத்தில் குதிரைகள் சில வசித்து வந்தன. இதனை பிடித்து தம் வேலைகளிற்கு பயன்படுத்துவதற்கு பலர் முயன்று வந்தனர். அதே வேளை பல கொடிய விலங்குகளும் அவற்றை பிடித்து உண்ண முயன்றன. ஆனால் அவையோ மிகவும் கெட்டித்தனமாக ஓடித் தப்பிக் கொண்டன. எனினும் தமது நண்பர்களுடன் சுதந்திரமாக தாம் விரும்பிய நேரம் உறங்கி விளையாடி மகிழ்வுடன் வசித்து வந்தன.
ஒரு நாள் ஓருவன் குதிரைச் சவாரி செய்து பக்கத்து கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தான்.தான் சவாரி செய்த குதிரை களைத்து விட்டதால் அதனை ஓய்வெடுக்க சிறிது நேரம் கடிவாளத்தை அவிட்டு விட்டான். அவ்வேளை பார்த்து ஒரு புலி ஒன்றைக் கண்டதால் மற்றைய குதிரைகள் விரைவாக அவ்வழியே ஓடி வந்தன. சவாரிக் குதிரை மட்டும் எதைப் பற்றியும் கவலைப் படாமல் புல் மேய்வதைக் கண்ட மற்றைய குதிரைகளுக்கோ வியப்பாக இருந்தது. அவை சவாரிக் குதிரையின் அருகே சென்று உனக்குப் பயமே இல்லையா எனக் கேட்டன. அதற்கு சவாரிக் குதிரை தனது முதலாளி இருக்கையில் தனக்கு எந்தப் பயமும் இல்லை என்றது. மேலும் தனக்கு உணவு கொடுத்துஇ குளிப்பாட்டிஇ தலைசீவி விட்டுஇ தடவிக் கொடுத்து அன்பாகப் பார்த்துக் கொள்கிறார் எனப் பெருமிதமாகப் பேசியது.
இவற்றை எல்லாம் கேட்ட குதிரைகளுக்கு தமது வாழ்க்கையையும்இ தாம் காடு மேடெல்லாம் சுற்றித்திரிந்து கொண்டிருப்பதையும் நினைத்து மிகவும் கவலை அடைந்தன. சவாரிக் குதிரையிடம் தாமும் அதனுடன் வந்து வசிக்க விரும்புவதாகக் கூறின. சவாரிக் குதிரையும் பெருமிதத்துடன் தனது முதலாளி திரும்பி வந்தவுடன் குதிரைகளின் விருப்பத்தைக் கூறியது.
குதிரையின் முதலாளிக்கோ மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. தனது மகிழ்வை வெளியே காட்டிக் கொள்ளாது மிகவும் சிரமப்பட்டு அழைத்துச் செல்வது போல் கூட்டிச் சென்றான். கிராமத்திற்குள் வந்தவுடன் பலர் வந்து குதிரைகளைச் சூழ்ந்து கொண்டனர். தமது முதலாளி இருப்பதை நினைத்து குதிரைகள் அமைதியாக நின்றன.
பலர் கூடிய பின் முதலாளி விலை பேசத் தொடங்கினான். நல்ல விலை கொடுத்தவர்களிடம் குதிரைகளைப் பிடித்துக் கொடுத்து நிறையப் பணத்தை சம்பாதித்தான். எதுவுமே புரியாது குதிரைகள் நின்றன. குதிரைகளை வாங்கியவர்கள் தமது வீட்டிற்கு அழைத்து சென்றனர். எல்லாக் குதிரைகளும் தமது நண்பர்களையும் குடும்பத்தையும் விட்டுப் பிரிந்தனர். வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட குதிரைகளுக்கு கடிவாளம் இடப்பட்டது. அவர்களிற்கான உணவு வழங்கப்பட்டது. பாதுகாப்பாக குதிரைக்கான குடிசை அமைத்து அதில் அடைக்கப்பட்டன.
தமது தேவைகளிற்கு பயன்படுத்துவதற்காக முதலாளிமார் தமக்கு உண்ண உணவும்இ உறங்க இடமும் கொடுத்து பராமரிப்பதை இப்போது தான் உணர்ந்து கொண்டன. வசதியான வாழ்வைத் தேடி வந்து அடிமையானதை நினைத்து வேதனைப்பட்டன.