Geitekillingen som kunne telle til ti // எண்ணத் தெரிந்த ஆட்டுக்குட்டி  

Illustrasjon: Pixabayஓர் ஊரில் ஓர் ஆட்டுக்குட்டி இருந்தது. அது ஒருநாள் வெளியே விளையாடும் பொழுது ஓர் குளத்தைக் கண்டது. அதில் தனது நிழலைக் கண்டது. உடனே ஆட்டுக்குட்டி “நான் ஒன்று” என்றது.

அதனைக் கண்ட பசுக்கன்று “என்ன செய்கிறாய்” என ஆட்டுக்குட்டியைக் கேட்டது.

நான் எண்ணுகிறேன், உன்னையும் எண்ணட்டுமா? எனக் கேட்டது. geitekillingen (pdf)

 

“நோகுமா? எனக் கேட்டது பசுக்கன்று.

“இல்லை அப்படியே நில் எண்ணுகிறேன்” என்றது ஆட்டுக்குட்டி

என் அம்மாவிடம் கேட்க வேண்டும்”; என்றது பசுக்கன்று..

உடனே ஆட்டுக்குட்டி “நான் ஒன்று , நீ இரண்டு” (1 2) என்றது.

“அம்மா அம்மா இந்த ஆட்டுக்குட்டி என்னை எண்ணி விட்டது” என பசுக்கன்று அழுதது.

பசுக்கன்று அழுவதைக் கண்ட பசு “எண்ணுவதா?அப்படி என்றால் என்ன” என ஓடி வந்தது.

உடனே ஆட்டுக்குட்டி “நான் ஒன்று ,பசுக்கன்று இரண்டு, பசு மூன்று”

(1 2 3) என்றது.

“அம்மா உங்களையும் எண்ணி விட்டது” என்றது ஆட்டுக்குட்டி. “இதோ வருகிறேன் நான் அதனைப் பிடிக்கிறேன்” எனக் கூறிக் கொண்டு பசு ஆட்டுக்குட்டியைத் துரத்திக் கொண்டு ஓடியது.

ஆட்டுக்குட்டியைத் துரத்திக் கொண்டு பசுக்கன்றும், பசுவும் ஓடியது.

இதனைக் காளைமாடு கண்டது. “ஏன் ஆட்டுக்குட்டியைத் துரத்துகிறீர்கள்” எனக் காளைமாடு கேட்டது

“ஆட்டுக்குட்டி எங்களை எண்ணுகிறது”என்றது பசுக்கன்று.

உடனே ஆட்டுக்குட்டி “நான் ஒன்று, பசுக்கன்று இரண்டு ,பசு மூன்று , காளைமாடு நான்கு” (1 2 3 4) என்றது.

உங்களையும் எண்ணி விட்டது என்றது பசுக்கன்று.

“இதோ வருகிறேன் நான் அதனைப் பிடிக்கிறேன்” எனக் கூறிக் கொண்டு காளைமாடும் ஆட்டுக்குட்டியைத் துரத்திக் கொண்டு ஓடியது.

இவை ஒன்றன் பின் ஒன்றாக ஓடிவருவதை அந்த வழியில் நின்ற குதிரை ஒன்று கண்டது. ஏன் ஆட்டுக்குட்டியை துரத்துகிறீர்கள் எனக் குதிரை கேட்டது.

“ஆட்டுக்குட்டி எங்களை எண்ணுகிறது” என்றது காளைமாடு.

உடனே ஆட்டுக்குட்டி “நான் ஒன்று பசுக்கன்று இரண்டு பசு மூன்று காளைமாடு நான்கு குதிரை ஐந்து ” (1 2 3 4 5) என்றது.

உங்களையும் எண்ணி விட்டது என்றது காளைமாடு.

“இதோ வருகிறேன் நான் அதனைப் பிடிக்கிறேன்” எனக் கூறிக் கொண்டு குதிரையும் ஆட்டுக்குட்டியைத் துரத்திக் கொண்டு ஓடியது.

இவை ஒன்றன் பின் ஒன்றாக ஓடிவருவதை அந்த வழியில் படுத்திருந்த பன்றி ஒன்று கண்டது. ஏன் ஆட்டுக்குட்டியை துரத்துகிறீர்கள் எனப் பன்றி கேட்டது.

“ஆட்டுக்குட்டி எங்களை எண்ணுகிறது” என்றது குதிரை.

உடனே ஆட்டுக்குட்டி “நான் ஒன்று, பசுக்கன்று இரண்டு ,பசு மூன்று, காளைமாடு நான்கு, குதிரை ஐந்து ,பன்றி ஆறு” (1 2 3 4 5 6) என்றது.

உங்களையும் எண்ணி விட்டது என்றது பசுக்கன்று.

“இதோ வருகிறேன் நான் அதனைப் பிடிக்கிறேன்” எனக் கூறிக் கொண்டு பன்றி ஆட்டுக்குட்டியைத் துரத்திக் கொண்டு ஓடியது.

 ஓடும் வழியில் ஓர் நதிக்கரை இருந்தது. அங்கு சிறிய வள்ளம் ஒன்று நின்றது.

ஓடிச் சென்ற ஆட்டுக்குட்டி அந்த வள்ளத்தில் ஏறியது. ஆட்டுக்குட்டிக்குப் பின்னால் பசுக்கன்று, பசு, காளைமாடு , குதிரை,  பன்றி  எல்லாம் வள்ளத்தில் பாய்ந்து ஏறின.

அந்த வள்ளத்தில்; செம்மறி, நாய், பூனை, சேவல் என்பன வேலை செய்தனர்.

வள்ளத்தில் எல்லா மிருகமும் பாய்ந்து ஏறியதால் வள்ளம் தாழ்ந்து விடும் என, கப்பல் ஓட்டுனரான சேவல் பயந்தது.

“இந்தக் கப்பலில் பத்துப்பேர் தான் போகலாம். யாருக்காவது எண்ணத் தெரியுமா?” எனச் சேவல் கத்தியது.

“எனக்குத் தெரியும்,எனக்குத் தெரியும்”என ஆட்டுக்குட்டி கூறியது.

உடனே மேலே போய் எண்ணும்படி எல்லா மிருகமும் கத்தின.

ஆட்டுக்குட்டியும் எண்ணத் தொடங்கியது.

 “நான் ஒன்று, பசுக்கன்று இரண்டு ,பசு மூன்று, காளைமாடு நான்கு, குதிரை ஐந்து ,பன்றி ஆறு, செம்மறி ஏழு, நாய் எட்டு, பூனை ஒன்பது, சேவல் பத்து” (1 2 3 4 5 6 7 8 9 10) என்றது.

எல்லா மிருகமும் ஆட்டுக்குட்டியைப் பாராட்டின. வள்ளமும் கரைக்கு வந்து சேர்ந்தது.

அன்றிலிருந்து ஆட்டுக்குட்டிக்கு வள்ளத்தில் கணக்கெடுப்பவர் வேலை கிடைத்தது.