Hesten og kamelen // குதிரையும் ஒட்டகமும்

Ill: pixabayDenne fortellingen handler om en hest som mobbet kamelen fordi han mente det var rart at menneskene brukte kamelen for å reise rundt i ørkenen istedenfor den hesten som var mye raskere. Dette førte til en konkurranse mellom hesten og kamelen. Under konkurransen skjønte hesten at kamelen klarte seg bedre i ørkenen og forstod derfor at alle har forskjellige talenter. 

 

 

 

ஓர் ஊரில் ஒரு குதிரை இருந்தது.

இது மிகவும் விரைவாக ஓடக்கூடியது. குதிரைஓட்டத்தில் இந்தக் குதிரையையே பந்தயம் கட்டுவர். எல்லோரும் குதிரையின் வேகத்தைப் பற்றிப் புகழ்வார்கள். இதனால் குதிரை மிகவும் கர்வம் அடைந்தது.
ஒருநாள் குதிரை தனது முதலாளியுடன் வெளியே சென்றது. அங்கே ஓர் ஒட்டகத்தைக் கண்டது. அந்த ஒட்டகம் சிலரை ஏற்றிக் கொண்டு பயணம் செய்து கொண்டிருந்தனர். ஒட்டகம் மெதுமெதுவாக நடந்து போவதைக் கண்ட குதிரை ஏளனமாகச் சிரிக்கத் தொடங்கியது. இந்த மனிதர்கள் ஏன் உன்மேல் ஏறிப் பயணம் போகிறார்களோ தெரியவில்லை என கிண்டல் செய்தது.
இதைக் கேட்ட ஒட்டகம் சிரிக்கத் தொடங்கியது. உன் அறிவு குறைவாக உள்ளது. மனிதர்கள் புத்திசாலிகள். உலகில் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் பலம் உடையவர்கள். உனது பலம் அறிந்து உன்னை ஓட்டப்பந்தயத்திற்கு பயன்படுத்துகின்றனர். எனது பலம் அறிந்தே இந்த மணல் தரையில் என்னைப் பயன் படுத்துகின்றனர். இதனால் மற்றவர்களை குறைவாக எண்ணாதே என்றது.
இதைக் கேட்டதும் குதிரைக்குக் கோபம் வந்தது. இந்த மணல் தரையிலும் என்னால் உன்னை விட விரைவாக ஓடமுடியும் என்றது. ஒட்டகம் சிரித்தபடியே “இன்று என்னுடன் வா. அப்போது உனக்கு விளங்கும்” என்றது. குதிரையும் ஒப்புக் கொண்டது.
இருவரும் வேகமாக ஓடத் தொடங்கினர். குதிரை ஆரம்பத்தில் வேகமாக ஓடியது. சிறிது தூரம் ஓடியதும் குதிரை களைத்து விட்டது. ஒட்டகம் களைப்பின்றி வேகமாக நடந்து முன்னேறியது. குதிரை மிகவும் களைத்து நடக்க முடியாது தடுமாறியது. ஒட்டகத்தின் வேகத்தையும்இ பலத்தையும் கண்டு குதிரை பிரமித்தது.
குதிரை தனது தோல்வியை ஒப்புக் கொண்டு தலை குனிந்தது. ஒட்டகத்திடம் மன்னிப்புக் கேட்டது.
உலகில் யாவரும் திறமைசாலிகளே என்பதைப் புரிந்து கொண்டது.