Tornerose // தூங்கும் இளவரசி

முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் ஒர் அரசனும், அரசியும் இருந்தனர். அவர்களிற்கு அழகான பெண்குழந்தை பிறந்தது. அக்குழந்தை மிகவும் அழகாக இருந்தாள். அதனால் அக்குழந்தைக்கு ரோசாமாண்ட் எனப் பெயரிட்டனர். அவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். ரோசாமண் இளவரசியை ஆசீர்வதிக்க தேவதைகளை அழைத்தார்கள். அவர்களின் இராட்சியத்தைச் சுற்றி பதின்மூன்று தேவதைகள் இருந்தனர். அவர்கள் பதி;னிரண்டு தேவதைகளையே அழைத்தனர். ஒருவரை மறந்து விட்டனர்.

 

இளவரசியை ஆசீர்வதிக்க அழைத்த தேவதைகள் வந்தனர். இளவரசியை ஆசீர்வதித்தனர். அந்தவேளையில் கோபமாக அழைக்காத தேவதை வந்தாள் அவள் மிகவும் கோபம் கொண்டிருந்தாள். அவள் கோபத்துடன் இளவரசிக்கு சாபமிட்டாள்.

இளவரசி 16வது வயது வரும் போது இறந்து விடுவாள் எனச் சாபமிட்டாள். அரசனும் அரசியும் மிகவும் கவலை அடைந்தனர். அவர்கள் தேவதைகளிடம் கவலையுடன் தமக்கு சாப விமோசனம் தரும்படி மன்றாடிக் கேட்டனர். அதனால் தேவதை அவளிற்கு சாபவிமோசனம் கொடுத்தாள். இளவரசி நூறாவது வயது வரும் போது அன்பான இளவரசன் தேடி வந்து எழுப்புவான் எனக்கூறினாள்.
இளவரசியும் வளர்ந்து வந்தாள். அரசன் தனது நாட்டிலுள்ள ஊசிகளையெல்லாம் தடைசெய்து விட்டான். அன்று அவளிற்கு பதினாறாவது வயது வந்தது. அவள் தனது அரண்மனையைச் சுற்றிப் பார்க்கப்போனாள். அங்கு ஒரு பாட்டி இருந்து தைத்துக்கொண்டு இருந்தாள். பாட்டியைக்கண்ட இளவரசி பாட்டியிடம் சென்று “பாட்டி நீ யார்? இங்கு என்ன செய்கிறாய்?” என்று கேட்டாள். பாட்டியும் நான் தைத்துக் கொண்டிருக்கிறேன். நீ விரும்பினால் எனக்கு உதவி செய் என்றாள். இளவரசியும் உதவி செய்வதற்கு ஊசியை வாங்கினாள். ஆனால் உடனே ஊசி குத்தி விட்டது.
பாவம் இளவரசி தூங்கத் தொடங்கிவிட்டாள். அவளது அரண்மனையிலும் எல்லோரும் தூங்கத் தொடங்கி விட்டனர். சாபம் கொடுத்த தேவதை மிகவும் அட்டகாசமாக சிரித்தபடி அவ்விடத்தை விட்டுப் போனாள்.
அந்த அரண்மனையைச் சுற்றியிருந்த மரங்களெல்லாம் வளர்ந்து காடாகி விட்டது. நூறு ஆண்டுகளாக இளவரசி தூங்கிக்கொண்டிருந்தாள். அன்றொருநாள் அவ்வழியாக ஒரு அழகான இளவரசன் வந்தான். அங்கே ஒரு அரண்மணை காட்டிற்கு நடுவே இருப்பதைக் கண்டான். அந்த அரண்மனைக்குள் போக விரும்பினான். காடுகளை வெட்டத் தொடங்கினான். மரங்கள் தானாக விலகி இடம் கொடுத்தன.
உள்ளே நுழைந்த இளவரசன் எல்லோரும் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டான். அங்கே அழகான இளவரசியும் உறங்குவதைக் கண்டான். அவளிள் காதல் கொண்டான். இளவரசியை முத்தமிட்டான். இளவரசி கண் விழித்தாள். அரண்மனையில் தூங்கிக் கொண்டிருந்த அனைவரும் கண்விழித்து எழுந்தனர்.
இளவரசனைக் கண்டு ஆனந்தம் கொண்டனர். இளவரசிக்கு அந்த அழகான இளவரசனைத் திருமணம் செய்து வைத்தனர். அவர்கள் இருவரும் நீண்ட காலம் இன்பமாக வாழ்ந்தனர்.