Kråka og papegøyen // சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை
Dette er en fortelling om en kråke og en papagøye som hadde en samtale om hva frihet er.
Det finnes tekst og lydfil på tamil.
சிறுவன் ஒருவன் கிளி ஒன்றினை அழகிய கூட்டினுள் வளர்த்து வந்தான். அவன் தினமும் கிளிக்கு விதம் விதமான உணவுகளையும் பழங்களையும் கொடுத்து வந்தான். சிறுவனின் வீட்டின் முன் நின்ற பலா மரத்தில் வசித்த வந்த காகம் ஒன்று இதனை தொடரந்து பார்த்து வந்தது. தன்னையும் உணவு தந்து பராமரிக்க யாரும் இல்லையே என எண்ணி ஏங்கியது.
ஒரு நாள் யாரும் வீட்டின் வெளியே இல்லாத நேரம் பார்த்து கிளியின் கூட்டின் அருகே சென்று «கிளியே கிளியே» உன்னை மனிதர்கள் இவ்வாறு அன்பாக கவனிக்கிறார்களே, பாசமாக இருக்கிறார்களே. ஆனால் என்னை மனிதர்கள் ஒரு நாள் கூட இவ்வாறு கவனிப்பதில்லையே என கவலைப்பட்டுக் கூறியது.
Lydfil på tamil
அதைக் கேட்ட கிளி காகத்தைப் பார்த்து கவலையுடன் சிரித்தது.
அப்பாவிக் காகமே வெளித் தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாதே. உனக்கிருக்கும் சுதந்திரம் எனக்கில்லையே. இந்த திறந்த வெளியில் சிறகடித்து பறந்து திரியும் சுகத்தை இந்த சிறிய கூட்டில் என்னால் அனுபவிக்க முடியுமா? நினைத்தவுடன் பறக்கவும், விரும்பிய உணவை உண்ணவும்; வசதியாக உறங்கவும் இந்த சின்னக் கூட்டில் இருந்தால் என்னால் முடியுமா? என தனது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தியது.
அப்போது தான் காகம் தனக்கு இருக்கும் சுதந்திரத்தை எண்ணிப் பார்த்தது. வீட்டினுள் இருந்த சிறுவன் இந்த பறவைகளின் உரையாடலைக் கவனித்தான். கிளியின் துயரத்தினை உணர்ந்து கொண்டான். தனது மகிழ்ச்சிக்காக பறவைகளை அடைத்து வைப்பது பாவம் என்பதனை உணர்ந்து கொண்டான். ஓடிச் சென்று கிளிக்கூட்டை திறந்து விட்டான். கிளி சந்தோசமாகபு; பறந்து சென்றது.
சுதந்திரம் எமது பிறப்புரிமை.