Kuene og reven // ஓற்றுமையே வலிமை
Fortelling om kuene og reven
ஒரு ஊரில் நான்கு பசுக்கள் ஒன்றாக ஒற்றுமையாக வசித்து வந்தன. அந்;த ஊரின் அருகாமையிலுள்ள காட்டில் ஒரு நரி; வசித்து வந்தது. அந்த நரி பல முறை இந்த மாடுகளை பிடித்து உண்ண முயற்சித்தது. ஆனால் இந்த மாடுகளின் ஒற்றுமையால் அவை நான்கும் சேர்ந்து நரியை விரட்டின.
நரி எவ்வாறு இவற்றை உண்ணலாம் எனப் பல நாளாக யோசிதது;; இறுதியில் அதற்கு நல்ல யோசனை தோன்றியது.
பசுக்களிடம் சென்று நீங்கள் சிறந்த நண்பர்கள் தன்னையும் அவர்களுடன் சேர்த்துக் கொள்ளுமாறு மிகவும் தாழ்மையாகக் கேட்டுக் கொண்டது. பசுக்களும் நரியின் கதைக்கு மயங்கி ஒத்துக்கொண்டன. நரியோ பசுக்களைப் பிரிப்பதிலேயே தனது கவனத்தை செலுத்தியது. தனித்தனியாக ஒவ்வொரு பசுக்;களிடமும் சென்று அளவுக்கு அதிகமாகவே அவற்றைப் புகழ்ந்தது.
நீ; தான் மிகவும் புத்திசாலி, அழகானவர். நீ தான் இவர்களின் தலைவராக இருக்க வேண்டியவர் என்றும் உனது புத்திசாலித்தனத்தால் தான் மற்றையவை உன் மேல் அன்பு காட்டுகின்றனர் என்று ஒவ்வொரு பசுக்களாக பெருமைப்படுத்திக் கூறியது. இவற்றைக் கேட்ட பசுக்களிற்கு தாமே பெரியவர்கள் என்ற நினைப்புத் தோன்றியது. இதனால் கர்வம் உண்டாகி ஓன்றுடன் ஒன்று மோதத் தொடங்கின. இவைகளிற்கிடையே பிரிவு ஏற்பட்டு தனித் தனியே பிரிந்து சென்றன.
இவர்களின் பிரிவையே எதிர்பார்த்துக் காத்திருந்த நரி மிகவும் இலகுவாக தனித்தனியே வசித்து வந்த பசுக்களைத் தின்று தனது பசியைத் தீர்த்தக் கொண்டது.