Mauren og myggen // எறும்பும், நுளம்பும்

Illustrasjon: Pixabay

Dett er en fortelling om en maur og en mygg. Om sommeren forbreder mauren mat og hus til vinteren mens myggene nytet sommer været. Mauren sa til myggen at de måtte forbrede mat og hus til vinteren men myggene hørte ikke på mauren. Når vinteren kom, klarte mauren å leve fint. Myggene døde av kulde og sult.  

 

 

ஓர் புதரில் எறும்புகளும் நுளம்புகளும் வசித்து வந்தன. அப்போது கோடைகாலம் தொடங்கியது.

வெளியே எல்லோரும் கூடி மகிழ்ந்து தமது பொழுதினை கழித்து வந்தனர். நுளம்புகளும் இன்பமாக எல்லோரையும் கடித்து துன்புறுத்தி விட்டு ஆடிப் பாடி மகிழ்ந்தன. இடையிடையே இலைகளில் இருந்து இளைப்பாறின. ஆனால் எறும்புகளோ கூட்டம் கூட்டமாகச் சென்று தாம் குடியிருப்பதற்கு வீடு கட்டத் தொடங்கின. பனிகாலத்தில் உண்பதற்கு உணவுப் பொருட்களையும் சேகரிக்கத் தொடங்கின.
நுளம்புகள் இலைகளில் படுத்திருந்து இளைப்பாறுவதைக் கண்ட எறும்புகள்
நண்பர்களே விரைவில் பனிகாலம் வரப்போகிறது. நீங்கள் இருப்பதற்கு வீட்டினை அமைக்க வில்லையா? எனக் கேட்டன. இதைக் கேட்ட நுளம்புகள் கல கல எனச் சிரிக்கத் தொடங்கின. இப்போது மிகவும் இனிமையான கோடைகாலம் நடக்கிறது. இதனை அனுபவிக்காது எப்போதோ வரப் போகும் பனிகாலத்தை ஏன் நினைக்கின்றாய் நண்பா? எனக் கேலியாகக் கேட்டன. எறும்புகள் எதுவுமே கூறாது சென்று விட்டன.
சில நாட்களின் பின் மீண்டும் எறும்புகள் அவ் வழியே சென்று தமக்கான உணவுப் பொருட்களை சேகரிக்கத் தொடங்கியது. ஆனால் நுளம்புகளோ அங்கே பாடி ஆடி நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தன. அதைக் கண்ட எறும்புகள் நண்பர்களே பனிகாலம் நெருங்குகிறது. ஏன் வீணாக பொழுதை வீணடிக்கிறீர்கள்? எனக் கேட்டன. இதைக் கேட்ட நுளம்புகள் மீண்டும் கல கல எனச் சிரிக்கத் தொடங்கின. இனி வரப் போகும் பனிகாலத்தை ஏன் நினைக்கின்றாய் நண்பா? எனக் கேலியாகக் கேட்டன. எறும்புகள் எதுவுமே கூறாது சென்று விட்டன.
எறும்புகளோ தமக்குத் தேவையானவற்றை எல்லாம் சேகரித்து முடித்து இளைப்பாற வந்தன. ஆனால் நுளம்புகளோ அங்கே பாடி ஆடி நேரத்தைக் கழித்துக் கொண்டிருந்தன. அதைக் கண்ட எறும்புகள் நண்பர்களே பனிகாலம் நன்றாக நெருங்கி விட்டது. ஏன் வீணாக இறுதிப் பொழுதை வீணடிக்கிறீர்கள்? விரைவில் எங்கே வசிக்கலாம் என்றாவது யோசியுங்கள். சிறிதளவாவது உணவைத் தேடுங்கள். எனக் கவலையுடன் கூறின. இதைக் கேட்ட நுளம்புகள் மீண்டும் கல கல எனச் சிரிக்கத் தொடங்கின. முடியப்போகும் நல்லகாலத்தை அனுபவியாது இனி வரப் போகும் பனிகாலத்தை ஏன் நினைக்கின்றாய் நண்பா? எனக் கேலியாகக் கேட்டன. எறும்புகள் எதுவுமே கூறாது சென்று விட்டன.
பனிகாலம் தொடங்கியது. எறும்புகள் தனது குடும்பத்தினருடன் தமது வீட்டினுள் இருந்து தாம் சேகரித்த உணவையும் உண்டு மகிழ்ந்து பனிகாலத்தைக் கழித்தன. ஆனால் நுளம்புகளோ முதல் நாளே குளிரைத் தாங்க முடியாது அங்கும் இங்கும் ஓடின. தமது நண்பர்களின் அறிவுரையை கேட்க வில்லையே எனக் கவலைப்பட்டன. குளிர் தாங்க முடியாது இறந்தும் போயின.
காலம் கடந்து வரும் அறிவால் நன்மை பயக்காது.