Duen og mauren // புறாவும் எறும்பும்

Fortelling om en maur og en due

Dette er en kjent fortelling i Sri Lanka. Fortellingen handler om en maur og en due. 

 

 

முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் ஒரு புறாவும் ஒரு எறும்பும் நண்பர்களாய் ஆற்றங்கரையின் அருகே நின்ற மரத்தில் வாழ்ந்து வந்தன. 
ஒரு நாள் பலமான காற்று வீசியது. அதனால் எறும்பு ஓடும் நீரில் வீழ்ந்து விட்டது. அதைக் கண்ட புறா சிறிது நேரம் திகைத்து நின்றது. பின் ஓர் இலையைப் பிடுங்கி ஓடும் நீரில் போட்டது.

எறும்பு தப்பிக் கரைக்கு வந்தது. புறா மிகவும் மகிழ்ச்சி அடைந்தது. 
பின்பு ஒரு நாள் வேடன் ஒருவன் புறாவைக் கண்டான். புறாவைக் கொல்லத் திட்டமிட்டான். அம்பை எடுத்து வில்லைத் தொடுத்தான். இதனை எறும்பு கண்டது. வேடன் அருகில் சென்று அவன் காலில் கடித்தது. அவன் வலியால் கத்தினான். அவனின் குறி தவறியது. புறா அலறல் சத்தம் கேட்ட திசையில் வேடன் நிற்பதைக் கண்டது. அது பறந்து சென்று வேடனிடம் இருந்து தப்பிக் கொண்டது. மீண்டும் புறாவும் எறும்பும் நண்பர்களாய் வாழ்ந்து வந்தன.

ஒருவருக்கு நாம் உதவி செய்தால் மீண்டும் அந்த உதவி தேவையான நேரத்தில் எமக்குக் கிடைக்கும்.