Morsom fortelling // ஆசானும் மாணாக்கரும்
Morsom fortelling
Denne fortellingen er morsom og handler om en lærer og fem elever som er dumme. Under reisen skjer det noen morsomme handlinger. Barna elsker å høre slike fortellinger.
ஒரு ஊரில் ஆசானும் மாணாக்கரும் வசித்து வந்தனர். இந்த மாணவர்கள் மிகவும் முட்டாளாக இருந்தனர். Guru og fem elever (pdf)
ஒரு நாள் ஆசான் குதிரையில் ஏறி இருந்து பயணம் சென்றார். மாணவர்கள் பின்னே நடந்து சென்று கொண்டு இருக்கையில் ஆசானின் விலை உயர்ந்த பட்டுச் சால்வை கீழே விழுந்து விட்டது. ஆசான் இதனைக் கவனிக்கவில்லை. சிறிது தூரம் சென்ற பின்பு தனது சால்வையைக் காணவில்லை என்பதை ஆசான் கண்டார்.
மாணவர்களிடம் எனது சால்வையைக் கண்டீர்களா? என்று கேட்டார். ஆம், நாங்கள் நடந்து வரும் போது சால்வை தூரத்தில் விழுந்ததைக் கண்டோம் என மாணவர்கள் கூறினர்.
ஆசான் கோபத்தோடு கீழே ஏதாவது விழுந்தால் எடுத்து வர வேண்டும் எனப் பேசினார். மீண்டும் நடக்கத் தொடங்கினர்.
சிறிது தூரம் சென்றதும் குதிரை லத்தி போட்டது. உடனே மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து குதிரையின் லத்தியை அள்ளிக் கொண்டு வந்தனர்.
ஆசான் திடீரென மாணவர்கள் காணாது போனதைக் கண்டார். சிறிது நேரத்தில் மிகவும் கஸ்டப்பட்டு எதையோ அவர்கள் தூக்கி வருவதைக் கண்டார்.
மாணவர்களுடம் மிகவும் பணிவாக நாம் இம்முறை கவனமாகக் கீழே விழுந்ததை எடுத்து வருகிறோம் என்றனர்.
ஆசானும் தனது மாணவர்கள் தான் கூறியதை அப்படியே செய்வதைக் கண்டு மகிழ்ந்தார். எதை நான்; கீழே விழுத்தி விட்டேன் எனக் கேட்டார்.
மாணவர்கள் தாம் அள்ளி வந்த குதிரையின் லத்தியைக் காட்டினார்கள். ஆசானுக்குக் கடுங்கோபம் வந்தது. மாணவர்களைத் திட்டித் தீர்த்தார்.
பின்பு எதனைக் கீழே விழுந்தால் எடுத்து வரலாம் எதனை எடுக்கக் கூடாது என ஒரு தாளில் எழுதினார். அதனை மாணவர்களிடம் கொடுத்தார். இனிமேல் ஏதாவது விழுந்தால் இதனை வாசித்துப் பாருங்கள். இதில் எதனைக் கீழே விழுந்தால் எடுக்கலாம் என எழுதியுள்ளேன் என்றார்.
மீண்டும் நடக்கத் தொடங்கினர். சிறிது தூரம் சென்றதும் குதிரை கால் தடக்கிக் கீழே விழுந்தது. அதிலிருந்து ஆசானும் கீழே விழுந்து விட்டார்.காலில் நன்றாக அடிபட்டுக் கொண்டது.
மாணவர்கள் தம்மிடம் ஆசான் கொடுத்த தாளைப் பார்த்தனர். அதில் எழுதி இருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு நிற்காது நடந்தனர்.
ஆசான் மாணவர்களை தன்னைத் தூக்கிச் செல்லும்படி கத்தினார். மாணவர்களும் இந்தத் தாளில் உங்களது பெயர் இல்லை எனக் கூறிவிட்டு நடந்து சென்றனர்.
ஆசான் தனது முட்டாள் மாணவர்களை நினைத்துக் கவலைப்பட்டார்.