Sang om et barn // சுட்டிப் பாப்பா

Ill:AdobeStock 

 

 

சுட்டி சுட்டிப் பாப்பா

சொன்னதெல்லாம் கேட்பா

அழகு அழகு பாப்பா

அமைதியாய் நடக்கும் பாப்பா

குடுகுடு குடு குடு பாப்பா

 

கூடவே ஓடி வரும் பாப்பா

ஆடி எடுத்து வரும் பாப்பா

அப்பா சொல்வதை எல்லாம் கேட்பா

குறு குறுவென பார்க்கும் பாப்பா

குறும்பாய் சிரிக்கும் பாப்பா

குட்டி பாப்பாக்கள் எல்லோரும்

ஓன்றாய் இங்கு விளையாடி

இன்பமாய் பொழுதைப் போக்குவரே!