Sang om katter // ஒரே குலம்

Foto: PixabayDenne sangen handler om katter. Budskapet er at vi alle er like selv om vi har ulike farger.

வெள்ளை நிறத்தொரு பூனை- எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றது அப்பூனை- அவை
பேருக்கொரு நிறமாகும்
சாம்பல் நிறமொரு குட்டி- கருஞ்
சாந்து நிறமொரு குட்டி

பாம்பின் நிறமொரு குட்டி- வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி
எந்த நிறமிருந்தாலும்-அவை
யாவும் ஒரே குலம் அன்றோ
இந்த நிறம் சிறிதென்றும் இவை
ஏற்றமென்றும் சொல்லலாமோ?