Vind og sol // காற்றும் ,கதிரவனும்

Foto: PixabayDette er en fortelling om vind og sol.

ஒரு முறை காற்றிற்கும் கதிரவனிற்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. காற்று “உன்னை விட நான் தான்பலசாலி ” என்று கதிரவனை ஏளனமாகக் கேலி செய்தது.. காற்று தானே இவ் உலகில் பலசாலி எனக் கர்வம் கொண்டிருந்தது. தான் நினைத்தால் இந்தப் பூமியையே உடைத்து எறிந்து விடுவேன் எனக் கதிரவனிடம் கர்வமாகக் கூறியது.
அதற்கு சூரியன்”நிச்சயமாக இல்லை”என்று பதில் அளித்தது.

 

அப்பொழுது வழிப்போக்கன் ஒருவன் நடந்து செல்வதை அவை கண்டன. அவன் போர்வையால் போர்த்திக் கொண்டு இருந்தான். அந்த வழிப்போக்கனின் போர்வையை யார் கீழே விழ வைக்கின்றோமோ அவர் தான் பலசாலி என்று காற்றும்க திரவனும் தங்களுக்குள் பேசித் தீர்மானித்துக் கொண்டன. காற்று முதலில் முயற்சித்தது.
பலத்த காற்று வேகமாக அடித்து அந்த வழிப்போக்கனின் போர்வையைத் தூக்கி எறிய முயன்றது. மேலும் மேலும் பலத்துடன் வேகமாக அடித்தும் கூட அந்த வழிப்போக்கன் போர்வையை விடாமல் உடலுடன் இறுகப் போர்த்திக் கொண்டு நடந்தான் .பாவம்! காற்று தோற்றுப்போனது.
இப்பொழுது சூரியன் முயன்றது.கதிரவன் மெல்ல நகைத்து தன் வெப்பத்தை வெளி விட்டது. கதிரவனின் வெப்பத்தை வழிப்போக்கனால் தாங்கவே முடியவில்லை. உடனே அவன் தன் போர்வையை சற்றே விலக்கினான்.
கதிரவனின் வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. வழிப்போக்கன் போர்வையைக் கலட்டி எறிந்தான். “இதனால் கதிரவனே காற்றை விட மிகவும் பலசாலி”எனத் தெரிய வந்தது.
கதிரவன் மிகவும் அடக்கமாக காற்றிடம் இவ் உலகில் எல்லோரிற்கும் தனிப்பட்ட திறமை உள்ளது. யாரும் உயர்ந்தவரும் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை என்றது.
காற்றும் தனது பிழையை ஒத்துக் கொண்டது.