Divali // தீபாவளி
தீபாவளி இந்து மதத்தின் ஒரு பண்டிகையாகும்.
தீபங்களை ஏற்றும் பண்டிகையே தீபாவளியாகும். தீபஒளியானது தெய்வங்களுக்கு இருளை அகற்ற உதவுகிறது. நன்மையானது எப்போதும் தீமையை வெல்லும். வீட்டு வாசலின் முன்பு விளக்கேற்றிக் கோலமிட்டு அலங்காரங்கள் செய்து விருந்தினர்கள், நல்ல கடவுளர்களை வரவேற்பர். இது தீய சக்திகளை விலக்கிடும் பண்டிகையாகும்.



தீபாவளிப் பண்டிகையைப் பல்வேறு முறைகளில் கொண்டாடுவர். இது இடங்களுக்கிடையே வேறுபடும். தீபாவளி அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பர் தொடக்கத்தில் கொண்டாடப்படுகிறது. தீபாவளியன்று குடும்பத்தினர் அழகான ஆடைகளை அணிவார்கள். பலர் மருதாணியால் தங்கள் கைகளில் வரைவார்கள். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இணைந்து கொண்டாடுவது வழக்கம். அவர்கள் சுவையான உணவுப்பண்டங்கள் மற்றும் இனிப்பு வகைகளை உண்பார்கள். பலர் ஒருவருக்கொருவர் பரிசுகளை வழங்குவார்கள். சிலர் பட்டாசுகளும் வெடிப்பார்கள்.


குடும்பம், நண்பர்களுடன் தீபாவளி விருந்து

.கையில் மருதாணியிடல்

மேசையில் இனிப்புப் பலகாரங்கள்

வானில் பட்டாசுகள்.
இந்துக்கள் பல கடவுளர்களை நம்புகிறார்கள். இலட்சுமி ஒளியும் செழிப்பும் தரும் செல்வத்தின் தெய்வமாகும். தீபாவளியின் போது இலட்சுமி தங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்று இந்துக்கள் விரும்புகிறார்கள். அவள் தீய சக்திகளை விலக்கி வைக்கிறாள். ராமரும் சீதையும் பல வருடங்கள் கழித்து திரும்பி வந்ததையும் தீபாவளி நினைவுபடுத்துகிறது.


தீபாவளியின் போது இந்துக்கள் பிரார்த்தனை செய்து கடவுளர்களுக்கு படையல் வைத்து வணங்குவர். அதற்கு பூஜை என்று பெயர். பூஜையின் போது உணவுப்பண்டங்கள், பானங்கள் படைத்து குத்துவிளக்குகள் ஏற்றி மற்றும் தூபங்கள் இட்டு கொண்டாடுவர். பலர் பாடி ஆடி மகிழ்வார்கள். கடவுளின் சிலைகளை நீராட்டி சந்தனம் குங்குமத்தால் அலங்கரிப்பர். தீபாவளியன்று பலர் கோயில்களுக்குச் செல்வதுடன் நண்பர்கள் வீடுகளுக்கும் செல்வர்கள். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் தீபாவளி வாழ்த்துகள் கூறுவர். தீபாவளி அட்டைகளையும் ஒருவருக்கொருவர் அனுப்புவார்கள்.

