Språk og samspill – fra 14 måneder // மொழியும் இணைந்த செயற்பாடும் – 14 மாதத்திலிருந்து

Denne ressursen er en del av en serie som omhandler tidlig språkutvikling. Serien er delt inn i fire ulike alderstrinn: svangerskap og nyfødt, fra 4 måneder, fra 8 måneder og fra 14 måneder til ca. 2 år. Ressursene gir konkrete råd om interaksjon og samspill med barn i alderen 0 – 2 år som kan bidra til småbarns språkutvikling. Er du fagperson og møter foresatte til samtaler om småbarns språkutvikling, kan du med fordel dele denne ressursen med omsorgspersoner. Ressursene er utviklet av bydel Stovner i Oslo kommune i samarbeid med PPT Oslo. Morsmål.no har tilpasset og oversatt ressursene til flere språk.

இதைப்பற்றி அறிந்துள்ளீர்களா?

  • குழந்தைகள் தமது அசைவுகள், ஒலிகளைப் பயன்படுத்தி ஏதாவது சொல்ல முற்படுவர். குழந்தை எழுப்பும் ஒலிகளானது குழந்தைக்கு மிகவும் அவசியமானதாக இருக்கலாம்.
  • குழந்தை தான் சொல்வதைதைக் காட்டிலும் அதிகமாக விளங்கிக் கொள்கிறது. தனது எண்ணங்களை சொற்களால் வெளிப்படுத்த, குழந்தைகளுக்கு உதவி தேவைப்படுகிறது. நீங்கள் குழந்தை செய்வதையும் சொல்ல முயற்சிப்பதையும் அதன் ஆர்வத்தினையும் கண்டறிந்து, உரையாடுவதன் மூலம் ஊக்குவிக்கலாம்.
  • சிறு குழந்தைகள் ஒலிகளைக் கலந்து வார்த்தைகளைத் தவறாகச் சொல்வது மிகவும் பொதுவானது. இது மொழி வளர்ச்சியின் இயல்பான பகுதியாகும். உங்களுக்கு இது பற்றிய விளக்கம் தேவையாக இருந்தால், அல்லது உங்கள் குழந்தையின் மொழி குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால், உங்கள் சுகாதார நிலையம் அல்லது மழலையர் பள்ளியைத் தொடர்பு கொள்ளுங்கள்.

இதயத்தின் மொழி

பெரும்பாலான மக்களுக்கு இதயத்தின் மொழி என்பது அவர்களின் உணர்வுகளை எளிதாக விளக்குவதுடன், இலகுவாகக் கலந்துரையாடக் கூடிய மொழியாகும். அத்தோடு தாங்கள் கனவு காணும் மொழியுமாகும். இதயத்தின் மொழி என்பது இலகுவாக உணரக் கூடிய உணர்வு பூர்வமான மொழியாகும்.

குழந்தையுடன் பேசும்போது உங்களுக்கு மிகவும் இயல்பான மொழியில் பேசுங்கள்.


குழந்தையுடன் கதையுங்கள்

குழந்தையுடன் இணைந்து இருக்கும் நேரத்தில், நீங்கள் பார்ப்பது பற்றியும் செய்வது பற்றியும் கதைப்பதுடன் குழந்தை ஆர்வம் காட்டும் விடயங்கள் பற்றியும் கதையுங்கள். உங்கள் குழந்தை உங்களிடமிருந்து மொழியைக் கற்றுக் கொள்கிறது.

நாம் அன்றாடம் செய்யும் சாப்பிடுதல், குளிப்பாட்டுதல், குழந்தைகளுக்கு உடை அணிதல் அல்லது பல்லுத் துலக்குதல் போன்ற செயல்களை குழந்தைகளுடன் இணைந்து செய்யும் போது அவர்களுடன் பேசவும் கற்றுக் கொடுக்கவும் வாய்ப்புக் கிடைக்கிறது. நடைபெறும் விடயங்களைப் பற்றியும் வேறு விடயங்களைப் பற்றியும் குழந்தைகளுடன் உரையாட நேரத்தைச் செலவு செய்யுங்கள். இந்நேரங்களில் குழந்தைகள் புதிய சொற்களை அறிந்து கொள்வதுடன் இது அவர்களுடன் இணைந்திருக்கும் சிறந்த நேரமாகவும் அமைகிறது.

உங்கள் குழந்தை தன் உணர்வுகளைப் புரிந்து கொள்ள உதவுங்கள். குழந்தையின் உணர்வுகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்வதுடன் அவர்களைப் புரிந்து கொண்டதாகக் காட்டுங்கள். உதாரணமாக குழந்தையின் மகிழ்ச்சி, கவலை, சினம் அல்லது வேறு ஏதாவது உணர்வுகளை நீங்கள் பார்ப்பதனைப் பற்றிக் கூறலாம்.

அத்துடன் குழந்தைகளுடன் இணைந்து என்ன செய்தீர்கள் இனி என்ன செய்யத் தீர்மானித்துள்ளீர்கள் என்பதைப் பற்றியும் பேசுங்கள்.

நாட்டுப்புறக் கதைகளையும் வரலாற்றுக் கதைகளைக் கூறுங்கள்.

குழந்தைக்காகப் பாடுங்கள்

பெரும்பாலான குழந்தைகள் இசையை விரும்புகிறார்கள். உங்கள் குழந்தைக்காகப் பாடுங்கள். அசைவுடன் பாடல்களைப் பாடுங்கள்.


குழந்தையை வெளியே அழைத்துச் செல்லுங்கள்

குழந்தையுடன் வெளியே சென்று வாருங்கள். வெளியே செல்லும் போது காண்பவற்றையும் அனுபவங்களையும் குழந்தையுடன் கதையுங்கள் . நீண்ட தூரம் நடைப்பயணம் செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை.

இணைந்து விளையாடுங்கள்

குழந்தையுடன் இணைந்து விளையாடுங்கள். குழந்தைக்கு விருப்பமுள்ள விளையாட்டுப் பொருட்களுடன் விளையாடுவது நல்லது. விளையாட்டினைப் பற்றியும் நீங்கள் செய்வது பற்றியும் குழந்தைக்குக் கூறுங்கள்.

விளையாட்டுக்கள் பல சாத்தியக் கூறுகளைக் கொண்டுள்ளன! உதாரணமாக கரடிப் பொம்மை உறுமியவாறு உங்களுடன் கதைப்பது போலவும் அல்லது ஒரு குவளையிலிருந்து குடிப்பது போலவும் பாசாங்கு செய்து விளையாடுங்கள் . அதேபோல் கார் ஓட்டுவது விமானம் பறப்பது போல் நடித்து விளையாடுங்கள் .

குழந்தையுடன் இணைந்து புத்தகங்களைப் பாருங்கள்

புத்தகத்தில் இருப்பவை பற்றிக் கதைப்பதுடன் குழந்தைகள் சுட்டிக்காட்டும் விடயங்கள் பற்றியும் கதையுங்கள். இந்நேரத்தைச் சிறந்ததாக அமையுங்கள்.
புத்தகம் வாசிப்பதற்கான நேரத்தை ,உதாரணமாக படுக்கைக்குச் செல்வதற்கு முன் அல்லது உணவருந்திய பின் எனத் திட்டமிடுங்கள்.

Det er mulig å skrive ut eller bruke innhold fra dette innlegget på flere måter.

Legg merke til at innhold kan være ulikt lisensiert.

Regler for bruk av teksten 

Denne teksten har lisensen CC BY-NC-SA 4.0. Denne lisensen gir deg rett til å dele og bruke dette innholdet på visse vilkår:

  • Du må alltid oppgi hvem som har laget innholdet.
  • Du kan bare dele innholdet med samme lisens som det opprinnelige innholdet.
  • Du kan ikke benytte materialet til kommersielle formål.

Regler for bruk av bilder i teksten

Bildene i denne teksten kan ha ulike lisenser. Les mer om hvert bilde.

  1. Tegning av et rødt hjerte med tekste "hjertespråk"Ikke_bruk_-_Stovner_-_bilde_hjertesprak-removebg-preview.png — Illustrasjon: Bydel Stovner, Oslo

  2. Tegning av en mann og et barrn som sitter på et teppe.30-1.png — Illustrasjon: Bydel Stovner, Oslo

  3. Tegning av en kvinne som bader et barn. Foran kvinnens ansikt er det snakkebobler32.png — Illustrasjon: Bydel Stovner, Oslo

  4. Tegning av en mann som holder et barn i armene sine23.png — Illustrasjon: Bydel Stovner, Oslo

  5. Tegning av en kvinne som som sitter på sengekanten til et barn. De snakker sammen.25.png

  6. Tegning av et barn som leker med musikkinstrument31-1.png — Illustrasjon: Bydel Stovner

  7. Tegning av en mann som triller en barnevogn med et barn i.Bilder_til_NAFO.png_mann_m_vogn_-removebg-preview.png — Illustrasjon: Bydel Stovner, Oslo

  8. Tegning av en kvinne og to barn som leker sammen26.png — Illustrasjon: Bydel Stovner, Oslo

  9. Tegning av en mann og tre barn. Mannen holder en bamse på fanget.29.png — Illustrasjon: Bydel Stovner, Oslo

  10. Tegning av en mann som lese bok for et barn.24.png — Illustrasjon: Bydel Stovner, Oslo

Regler for bruk av lydfiler i innlegget

Denne teksten har lisensen CC BY-NC-SA 4.0. Denne lisensen gir deg rett til å dele og bruke dette innholdet på visse vilkår:

  • Du må alltid oppgi hvem som har laget innholdet.
  • Du kan bare dele innholdet med samme lisens som det opprinnelige innholdet.
  • Du kan ikke benytte materialet til kommersielle formål.