Språk og samspill – fra 4 måneder // மொழியும் இணைந்த செயற்பாடும் – நான்கு மாதத்திலிருந்து
இதைப்பற்றி அறிந்துள்ளீர்களா?
குழந்தையுடன் விளையாடிப் பேசுவதன் மூலம் நல்ல அனுபவங்களைப் பெறுவீர்கள். அத்தோடு குழந்தையின் உணர்வுகளும் மொழி வளர்ச்சியும் ஆரம்பத்திலேயே தூண்டப்படும்.
குழந்தை வளர்கையில் மொழிக்கான ஒலிகளையும் பயிற்சி செய்கிறது.
இதயத்தின் மொழி
பெரும்பாலான மக்களுக்கு இதயத்தின் மொழி என்பது அவர்களின் உணர்வுகளை எளிதாக விளக்குவதுடன் இலகுவாகக் கலந்துரையாடக் கூடிய மொழியாகும். அத்தோடு தாங்கள் கனவு காணும் மொழியுமாகும். இதயத்தின் மொழி என்பது இலகுவாக உணரக் கூடிய உணர்வுபூர்வமான மொழியாகும்.
குழந்தையுடன் பேசும்போது உங்களுக்கு மிகவும் இயல்பான மொழியில் பேசுங்கள்.

குழந்தையுடன் கதையுங்கள்
உங்களுடன் குழந்தை தொடர்பு கொள்கிறது.
குழந்தையுடன் கதையுங்கள். குழந்தையைக் கவனியுங்கள். குழந்தை எழுப்பும் ஒலிகளைக் கேட்டு அதே போல் மீண்டும் செய்யுங்கள்.
குpந்தை காட்டிடும் உணர்வுகளுக்கேற்ற சொற்களைக் கூறுங்கள்.
குழந்தையை சிரிக்கவும் புன்முறுவல் செய்யவும் வையுங்கள்.
குழந்தையுடன் சுற்றிப் பார்ப்பதுடன் பார்ப்பதைப் பற்றிப் பேசுங்கள்.

குழந்தைக்காகப் பாடுங்கள்
குழந்தைக்கு பாடல்களைப் பாடுங்கள்.
உங்கள் இதயத்தின் மொழியில் பாடுங்கள்.
நீங்கள் பாடும்போது அசைவுகளுடன் முகபாவனைகளையும் பயன்படுத்துங்கள்.
ஒரே பாடலைப் பலமுறை பாடுங்கள். குழந்தை ஒரே வார்த்தைகளைப் பலமுறை கேட்பதால் கற்றுக்கொள்கிறது!

இணைந்து விளையாடவும்
குழந்தையுடன் விளையாட்டுகளைப் பற்றிப் பேசுங்கள்.
விளையாடும் போது விளையாட்டுப் பொருட்களை கொடுத்து வாங்கி விளையாடுங்கள்.
ஒலிகளை உருவாக்கும் அல்லது பிரகாசமான வண்ணங்களைக் கொண்ட வெவ்வேறு அமைப்புகளுடன் கூடிய விளையாட்டுப் பொருட்களைக் குழந்தைக்குக் கொடுங்கள் – சேர்ந்திருந்து ஆராயுங்கள்!

இணைந்திருந்து வாசியுங்கள்
உங்கள் குழந்தையுடன் இணைந்திருந்து புத்தகங்களைப் பாருங்கள்.
குழந்தைக்கு படங்களைக் காட்டுவதுடன் பார்ப்பதைப் பற்றி பேசுங்கள்.
புத்தகங்களை வைத்திருந்து பார்க்க குழந்தையை விடுங்கள்
உங்கள் குழந்தையுடன் சேர்ந்து புத்தகங்களைப் பார்ப்பது வாசிப்பது விளையாடுவதிலுள்ள மகிழ்ச்சியை உணருங்கள். குழந்தை நீண்ட நேரம் ஆர்வம் காட்டாவிட்டாலும் வாசிப்பினைத் தொடங்குவதற்கு இது ஒரு சிறந்த வழியாகும்.
