Språk og samspill – fra 8 måneder // மொழியும் இணைந்த செயற்பாடும் – எட்டு மாதத்திலிருந்து

Denne ressursen er en del av en serie som omhandler tidlig språkutvikling. Serien er delt inn i fire ulike alderstrinn: svangerskap og nyfødt, fra 4 måneder, fra 8 måneder og fra 14 måneder til ca. 2 år. Ressursene gir konkrete råd om interaksjon og samspill med barn i alderen 0 – 2 år som kan bidra til småbarns språkutvikling. Er du fagperson og møter foresatte til samtaler om småbarns språkutvikling, kan du med fordel dele denne ressursen med omsorgspersoner. Ressursene er utviklet av bydel Stovner i Oslo kommune i samarbeid med PPT Oslo. Morsmål.no har tilpasset og oversatt ressursene til flere språk.

இதிலுள்ள தகவலானது ஆரம்ப மொழி வளர்ச்சியினைப் பற்றிக் கூறும் தொடரின் ஒரு பகுதியாகும். இந்தத் தொடர் நான்கு வெவ்வேறு வயது நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: கர்ப்பம் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை,
4 மாதங்கள், 8 மாதங்கள் மற்றும் 14 மாதங்கள் முதல் கிட்டத்தட்ட 2 வயது வரை.
இத் தகவல்களானது 0 – 2 வயதுடைய குழந்தைகளுடனான தொடர்பு மற்றும் தொடர்பு பற்றிய சிறந்த ஆலோசனைகளை வழங்குகின்றன. இது இளம் குழந்தைகளின் மொழி வளர்ச்சிக்கு உதவ மிகவும் பயன்படுகிறது.
நீங்கள் குழந்தைகளுடன் தொழில்புரியும் நிபுணராயின் இளம் குழந்தைகளின் மொழி வளர்ச்சியைப் பற்றி பேசுவதற்காக பெற்றோரை சந்தித்தால் இந்தத் தகவலைப் பராமரிப்பாளர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். PPT ஒஸ்லோவுடன் இணைந்து ஒஸ்லோ நகராட்சியில் உள்ள ஸ்டோவ்னர் மாவட்டத்தால் இத்தகவல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் Morsmål.no இத் தகவல்களைப் பல மொழிகளில் மொழிபெயர்த்துள்ளது.

இதைப்பற்றி அறிந்துள்ளீர்களா?

குழந்தை நிறையப் பேச விரும்புகிறது அத்துடன் தன்னைப் புரிந்து கொள்ள ஒலிகளைப் பயன்படுத்துகிறது. இந்தக் காலக்கட்டத்தில் குழந்தையின் நினைவாற்றல் மேம்படுகிறது. அத்துடன் குழந்தையால் வார்த்தைகளைப் புரிந்து கொள்ளவும் முடியும். நீங்கள் குழந்தையுடன் பேசுவதன் மூலமும் அதே வார்த்தைகளை பலமுறை கூறுவதன் மூலமும் குழந்தை மொழியைக் கற்றுக் கொள்கிறது.
குழந்தை உங்களுடன் விளையாடவும் விரும்பும்.

இதயத்தின் மொழி

பெரும்பாலான மக்களுக்கு இதயத்தின் மொழி என்பது அவர்களின் உணர்வுகளை எளிதாக விளக்கிக் கூறுவதுடன் கலந்துரையாடக் கூடிய மொழியாயுமாகும். அத்தோடு தாங்கள் கனவு காணும் மொழியுமாகும். இதயத்தின் மொழி என்பது இலகுவாக உணரக் கூடிய உணர்வுபூர்வமான மொழியாகும்.

குழந்தையுடன் பேசும்போது உங்களுக்கு மிகவும் இயல்பான மொழியில் பேசுங்கள்.

குழந்தையுடன் கதையுங்கள்

நீங்கள் குழந்தையுடன் இருக்கும்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று குழந்தைக்குச் சொல்லுங்கள். உதாரணமாக: “இப்போது நான் கரண்டியை எடுத்து வந்து அதனால் உங்களுக்கு உணவு ஊட்டப் போகிறேன்”.
வெவ்வேறு சூழ்நிலைகளில் நீங்கள் செய்யும் செயல்களைப் பற்றி வார்த்தைகளில் கூறுங்கள்.

நீங்கள் பார்ப்பதையும் குழந்தையுடன் சேர்ந்திருக்கும் போது செய்வதனையும் மற்றும் குழந்தை ஆர்வம் காட்டும் விடயங்கள் பற்றியும் குழந்தையுடன் பேசுங்கள்.
நீங்கள் மெதுவாகவும் மென்மையான குரலிலும் பேசுவதையே குழந்தை விரும்புகிறது.


குழந்தைக்காகப் பாடுங்கள்

குழந்தைக்கு நீங்கள் பாடும் பாடல்களுடன் பொருந்தக்கூடிய அசைவுகளைப் பயன்படுத்துங்கள்.
குழந்தையின் ஒலியுடன் பயன்படுத்தக்கூடிய பொருட்களைக் கண்டறியவும். குழந்தை இதனை விரும்பும்.

அசைவுகளுடன் மழலையர் பாடலுக்கான உதாரணங்கள்:

  • சின்னத் தம்பி சின்னத் தம்பி நித்திரையோ..
  • நிலா நிலா ஓடி வா…
  • புள்ளிப் புள்ளி மானே….
  • வண்ணத்துப் பூச்சி வண்ணத்துப் பூச்சி…..

இணைந்து விளையாடவும்

விளையாட்டுகளைப் பற்றி குழந்தையுடன் பேசுங்கள்.
நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று குழந்தைக்குச் சொல்லுங்கள். விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து வாங்கி விளையாடுங்கள்.
குழந்தைகள் திரும்பத் திரும்ப விளையாட விரும்புவார்கள். எனவே ஒரே விஷயத்தை பல முறை செய்யத் தயங்காதீர்கள்.
விளையாடும்போது மாறி மாறி தலைமையேற்று வழி நடத்தி விளையாடுங்கள்.

குழந்தையுடன் நீங்கள் செய்யக்கூடிய செயல்பாடுகளின் எடுத்துக்காட்டுகள்:

  • விளையாட்டு: முகத்தை மறைத்து விளையாடல்.
  • பெட்டிக்குள் பொருத்தும் விளையாட்டுப் பொருட்களை நிரப்புதல் கவிட்டுக் கொட்டுதல்.
  • பிளாஸ்டிக் பொருத்தி விளையாடும் விளையாட்டுப் பொருட்கள். (கட்டுதல், இடித்து விழுத்துதல்)

வாசிப்பதற்கான நேரத்தை திட்டமிடுங்கள்

குழந்தை எடுக்கக் கூடிய முறையில் புத்தகங்களை வையுங்கள்.
புத்தகத்தில் உள்ள படங்களை குழந்தைக்குக் காட்டி, அதில் பார்ப்பதைப் பற்றிப் பேசுங்கள்.
புத்தகத்தை குழந்தை தொட்டுக்காட்டி பக்கங்களைத் திருப்பிப் பார்ப்பதுடன் தானே வைத்திருக்கவும் விடுங்கள்.

தினமும் புத்தகங்களை ஒன்றாகப் பார்ப்பதற்கு சிறிது நேரம் ஒதுக்குங்கள். இதைச் செய்ய ஒரு குறிப்பிட்ட நாளின் நேரத்தை ஒதுக்குங்கள். உதாரணமாக படுக்கைக்கு முன் அல்லது உணவுக்குப் பிறகு.
வாசிப்பதற்கான நேரம் நீண்டதாக இருக்க வேண்டியதில்லை. இடையிடையே ஒரு படத்தைப் பார்த்தால் போதுமானது அல்லது புத்தகத்தை பல முறை மாற்றுவதும் சிறுவர்களுக்கு விருப்பமாக இருக்கும்.