Bukkene bruse // கடாய் ஆடும் பூதமும்

Dette er eventyret om de tre bukkene Bruse på tamil.

ஓர் ஊரில் ஓர் மலை அடிவாரத்தில் மூன்று கடாய் ஆடுகள் இருந்தன. அவைகளில் ஒன்று சிறியது. மற்றவை பெரியதும் பென்னம் பெரியதுமாகும். அவை இலையும் தளிரும் உண்டு கொழுப்பதற்காக ஒரு பாலத்தை கடந்து செல்ல வேண்டி இருந்தது.
ஒரு நாள் சிறிய காடாய் ஆட்டுக்குட்டியானது பாலத்தைக் சடக் சடக் என்ற சத்தத்துடன் கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அந்தப் பாலத்தின் கீழிருந்து பெரிய பூதம் ஒன்று
«நான் உன்னைப் பிடித்துத் தின்னப் போகிறேன் எனக் கூறியது.

அதற்கு சிறிய கடாய் ஆட்டுக்குட்டி «வேண்டாம் வேண்டாம். நான் மிகவும் சிறியவன். எனக்குப் பின்னால் வருபவன் மிகவும் பெரியவன். அவனைப் பிடித்து தின்றால் உனக்குப் பசி தீரும்” என்றது.
சரி, அப்படியானால் போ என்றது. அந்தப் பூதம்.
சிறிது நேரத்தில் அவ்வழியே பெரிய கடாய் ஆடு வந்தது. அது பாலத்தைக் சடக் சடக் என்ற சத்தத்துடன் கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அந்தப் பாலத்தின் கீழிருந்து பெரிய பூதம் மீண்டும்
«நான் உன்னைப் பிடித்துத் தின்னப் போகிறேன்” எனக் கூறியது.
அதற்கு பெரிய கடாய் ஆடு «வேண்டாம் வேண்டாம். நான் சிறியவன். எனக்குப் பின்னால் வருபவன் மிக மிகப் பெரியவன். அவனைப் பிடித்து தின்றால் உனக்கு நன்றாகப் பசி தீரும் என்றது”.
சரி, அப்படியானால் போ என்று மீண்டும் கூறியதுஇ அந்தப் பூதம்.
இன்னும் சிறிது நேரத்தில் அவ்வழியே பென்னம் பெரிய கடாய் ஆடு வந்தது. அது பாலத்தைக் சடக் சடக் என்ற பலத்த சத்தத்துடன் கடந்து வந்து கொண்டிருந்தது. அப்போது அந்தப் பாலத்தின் கீழிருந்து அந்தப் பெரிய பூதம் மீண்டும்
«நான் உன்னைப் பிடித்துத் தின்னப் போகிறேன்” எனக் கூறியது.
அந்தப் பென்னம்பெரிய ஆடோ « வேண்டுமானால் வா, நான் உனக்குப் பயப்பட மாட்டேன். உன்னை இடித்து தள்ளி விடுவேன், என்று கூறிய படியே பூதத்தின் மேல் பாய்ந்தது. பூதத்தை இடித்து ஆற்றினுள் தள்ளி விட்டது. பூதம் இறந்து போனது.
அதன் பின் அந்தக் கடாய் ஆடுகள் பயமின்றி சந்தோசமாக வாழ்ந்தன.