Sang om dyras egenskaper பாரதியார் பாடல்
Denne sangen skrev av Barathiyar og sangen handler om at barna skal ta tak i egenskapene og ta vare på dyr.
சின்னஞ் சிறு குருவி போல- நீ
திரிந்து பறந்து வா பாப்பா
வண்ணப் பறவைகளைக் கண்டு –நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.
கொத்தித் திரியும் அந்தக் கோழி- அதைக்
கூட்டி விளையாடு பாப்பா
எத்தித் திருடும் அந்தக் காக்காய்- அதற்கு
இரக்கப்பட வேணும் பாப்பா.
பாலைப் பொழிந்து தரும் பாப்பா. அந்தப்
பசு மிக நல்லதடி பாப்பா
வாலைக் குழைத்துவரும் நாய்தான்- அது
மனிதருக்குத் தோழனடி பாப்பா.
— பாரதியார்.