En sang om en fisker // புறப்படுவோமே
Denne sangen synges av fiskere mens de jobber.
புறப்படுவோமே மச்சான் புறப்படுவோமே
கட்டுவலை எடுத்திக்கிட்டு புறப்படுவோமே
கடல்கடந்து செல்வதற்கு தோணியுமுண்டு
கட்டைசுறா உழுவைமீன் கடலிலேயுண்டு
கடவுள் தந்த கைகளே முழுப்படவுண்டு
மச்சான் முழப்படவுண்டு
கடல்கடந்து மீன் பிடிப்போமே- வீண்
கவலையற்று வாழ்ந்திடுவோமே.