Hinduismen // இந்துமதம்
உலகின் பழமையான மதங்களில் இந்துமதமும் ஒன்றாகும். இந்து மதத்தில் நம்பிக்கை கொண்டவர் இந்து என்று அழைக்கப்படுகிறார். இந்து மதம் உலகின் மூன்றாவது பெரிய மதமாகும்.

இந்தியாவில் வாரணாசி நகருக்கு அருகிலுள்ள கங்கை நதியில் ஒருவர் தனது படகில் அமர்ந்துள்ளார்.
நம்பிக்கை
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் சில வரைமுறைகளால் இணைக்கப்பட்டு அதற்கு அடங்கி நடக்கின்றன என்று இந்துக்கள் நம்புகிறார்கள். மனிதர்கள் விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு குறிப்பிட்ட பணிகள் உள்ளன. இது தர்மம் என்று அழைக்கப்படுகிறது.
பிறக்கும் அனைத்தும் இறந்து மீண்டும் பிறக்கும் என்று இந்துக்கள் நம்புகிறார்கள். இது மறுபிறப்பு என்று அழைக்கப்படுகிறது. இது ஸம்ஸார என்று குறிப்பிடப்படுகிறது. நற்செயல் செய்து வாழ்ந்தால் மறுபிறப்பைத் தவிர்க்கலாம். பூமியில் பிறக்காது தெய்வங்களுடன் சங்கமமாக முடியும். இது மோட்சம் என்று குறிப்பிடப்படுகிறது.
தெய்வங்கள்
இந்து மதத்தில் பல மில்லியன் தெய்வங்கள் இருப்பதுடன் பல்வேறு பாரம்பரியங்களும் கதைகளும் உள்ளன. பிரம்மா விஷ்ணு மற்றும் சிவன் போன்ற தெய்வங்கள் முக்கியமானவர்களாகக் கருதப்படுபவர்கள். பிரம்மா உலகைப் படைப்பதுடன் படைத்த அனைத்தையும் ஆளுபவராகும். விஷ்ணு உலகைக் காப்பதுடன் மனிதர்களின் விதிகளைக் கட்டுப்படுத்தும் கடவுளாகும். சிவன் அனைத்து உயிர்களையும் அழிப்பவர் எனினும் புதிய வாழ்க்கையை மீண்டும் உருபாக்குபவருமாவார். பல தெய்வங்கள் இருப்பினும் பிரம்மனின் படைப்பின் வழியே உலகச் செயற்பாடுகள் நடக்கின்றன என இந்துக்கள் கூறுவர். இது அனைத்து உயிர்களையும் இயக்கும் ஒரு சக்தியாகும்.

இந்துக் கோவில்கள்
இந்துக்களுக்கு கோவில்கள் ஆன்மீக இல்லங்களாகும். உலகிலுள்ள கோவில்கள் பல்வேறு வடிவங்களில் வடிவமைக்கப்பட்டும் அலங்கரிக்கப்பட்டும் இருக்கும். ஆனால் கடவுள்களின் உருவங்களும் கடவுள்களின் சிலைகளும் எல்லா இடங்களிலும் பொதுவானவை. ஒரு இந்துக் கோவிலில் ஒரு கடவுளை மையப்படுத்திக் கட்டப்பட்டிருக்கும். அங்கு பல கடவுள்களின் சிலைகளும் படங்களும் வைக்கப்பட்டிருக்கும். .


புனித நூல்கள்
இந்து மதத்தில் பல புனித நூல்கள் உள்ளன. அவற்றில் வாழ்க்கையில் எது சரி எது தவறென விளக்குவதுடன் இந்துக்கள் தங்கள் மதத்தை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பதைப் பற்றியும் கூறப்பட்டிருக்கிறது. பல நூல்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட மிகப் பழமையானவையாகும். பல இந்துக்கள் இப் புனித நூல்களை கோயிலுக்குச் செல்லும் போது அங்கு செவிமடுப்பது வழக்கம். இதனை பிராமணக் குருக்கள் வாசிப்பார்கள். ஒரு பிராமண குலத்தைச் சேர்ந்தவரே மதக்குருவாக இருப்பார்.


பூஜை
தெய்வ வழிபாட்டை பூஜை என்பர். தெய்வ வழிபாட்டை கோயிலிலும் வீடுகளில் இறைவழிபாட்டுக்கென ஒரு அறையிலும் வழிபடுவர் அல்லது இயற்கை வெளிகளிலும் வழிபடலாம். தெய்வச் சிலைகள் முன்பும் தெய்வப் படங்களுக்கு முன்பும் பூஜை செய்து வழிபடுவர். இந்துக்கள் சிலைகளை கழுவி பூக்கள் உணவு மற்றும் பால் பரிமாறுவார்கள். குத்துவிளக்கேற்றி தூபங்களையும் ஏற்றித் தேவாரங்கள் பாடி வணங்குவர்.

அன்றாட வாழ்க்கை
இந்து மதத்தின் சிந்தனையாவது அனைத்து உயிரினங்கள் மீதும் கருணை காட்டுவதாகும். எனவே ஒரு உயிரினங்களுக்குக், கூட தீங்கு விளைவிக்க கூடாது என்பது அடிப்படைக் கொள்கையாகும். பசுக்கள் புனித விலங்குகள். மனிதர்களுக்குத் தேவையான பாலினைப் பசுக்கள் தருகின்றன. குழந்தையாக இருக்கும் போது தாய்ப் பாலiனை அருந்துகிறோம் ஆனால் வாழ்க்கை முழுவதும் பசுப்பாலை அருந்துகிறோம். இந்துக்கள் பசுக்களை எல்லோருடைய தாயைப் போல எண்ணுவர். மாடுகள் பல வகையான செயற்பாடுகளைச் செய்கின்றன அதனால் அனேகமான இந்துக்கள் மாடுகளுகளைத் தமது நெருங்கிய உறவாகக் கருதுவர். அத்துடன் மாமிசமும் உண்ண மாட்டார்கள்.
இந்து மதம் ஒரு மனிதன் என்ன நினைக்கின்றான் என்பதை விட என்ன செய்கின்றான் என்பதையே மையமாகக் கொண்டது. மரியாதை காட்டுவது உதாரணமாக, வயதானவர்களுக்கு மரியாதை கொடுப்பது வழக்கமாகும். குழந்தைகள் வயதானவர்களையோ அல்லது குடும்ப உறுப்பினர்களையோ சந்திக்கும் போது, அவர்கள் இரு கரங்களைக் கூப்பி வணக்கம் செலுத்துவர். அவ்வேளை குழந்தைகளும் அவர்களிடமிருந்து ஆசீர்வாதம் பெறுவார்கள்.

இந்துப் பண்டிகைகளும் சடங்குகளும்.
இந்துக்களுக்கு பல்வேறு பண்டிகைகள்கள் உண்டு. எத்தனை பணடிகைகள் உள்ளன என்பதைக் கணக்கிட்டுக் கூறமுடியாது. சிறிய பண்டிகைகள் வெவ்வேறு இடங்களில் கொண்டாடப்படும் அதேபோல் உலகம் முழுவதும் பரந்து வாழும் இந்துக்கள் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளும் உள்ளன. பண்டிகைகள் புராணக்கதைகள் மற்றும் அன்றாட நிகழ்வுகளைப் பின்பற்றியவையாக இருக்கும். தீபாவளியும் ஹோலி பண்டிகையும் இந்து மதத்தில் முக்கியமான விழாக்களாகும். தீபாவளி என்பது தீபத் திருவிழாவாகும். இருளை அகற்ற தெய்வங்களுக்கு தீபங்கள் உதவுவதுடன் நன்மைகள் பெருகித் தீமைகள் அகலும். ஹோலி என்பது வண்ணங்களின் திருவிழா. இது வசந்தகாலத்தின் தொடக்கத்தில் கொண்டாடப்படுவதுடன் வரவிருக்கும் ஆண்டானது பல வர்ண வண்ணங்களுடைய பயிர்களைப் போல பன்முகத்தன்மை கொண்டதாக அமைய வேண்டும் என்பதை அடையாளப் படுத்தக் கொண்டாடப்படுகிறது.


இந்து மதத்தில் சடங்குகள் முக்கியமானவை. சடங்குகள் அல்லது பல்வேறு செயல்கள் இந்துக்களின் வாழ்க்கையின் ஒரு கட்டத்திலிருந்து மற்றொரு நிலைக்கு மாறுவதைக் குறிக்கின்றன. அதாவது திருமணத்திற்குள் நுழைவது அல்லது குழந்தைப் பருவத்திலிருந்து இளமைக்கு மாறுவது போன்றவை. இதைவிட புனித நூல் சடங்கும் கொண்டாடப்படுகிறது. இச் சடங்கில் இந்து சிறுவர்களுக்கு அவர்களின் மணிக்கட்டில் சிவப்பு நூல் கட்டுவார்கள். அன்றிலிருந்து அவர்கள் வேதங்களைக் கற்கக்கூடிய இந்துவாக கருதப்படுவதுடன் அதனைக் கற்றுத் தேர்ச்சி பெறுவர். பண்டிகைகளும் சடங்குகளும் நாடுகளுக்கு நாடு அல்லது வசிக்கும் பகுதிகளைப் பொறுத்தும் நபருக்கு நபரும் வித்தியாசமாக கொண்டாடப்படுகின்றன.

ஆண் பிள்ளைகளுக்குப் புனித நூல் சடங்காக மணிக்கட்டில் சிவப்பு நூல் கட்டப்படுகிறது.
இந்துக்களின் புனிதமான இடங்கள்
இந்தியாவில் ஏராளமான இந்துக்கள் வாழ்கின்றனர். எனவே, இந்துக்கள் இந்தியாவிலுள்ள பல இடங்களைப் புனிதமானவையாகக் கருதுகின்றனர். புண்ணிய தலங்களுக்குச் செல்வதால் முக்தி கிடைக்கும் என்று இந்துக்கள் நம்புகிறார்கள். கங்கை நதியும் இமயமலை மலைத் தொடரும் தெய்வீகமாகக் கருதப்படுகிறது. சிவன் இமயமலையுடனும் கங்கை நதியுடனும் இணைந்திருப்பதாக இந்துக்கள் நம்புகிறார்கள். கங்கையில் நீராடுவது ஒரு வழக்கமான சடங்காகும். இதில் நீராடுவதால் பாவங்கள் கழுவப்படுவதுடன் அமைதியும் கிடைக்கிறது. பலர் கங்கை மற்றும் புனித நகரமான வாரணாசிக்கு யாத்ரீகர்களாகச் சென்று சடங்குகளைச் செய்கிறார்கள்.

கங்கையில் நீராடுவது ஒரு வழமையான செயலாகும்.
இந்தியாவில் வாரணாசி நகருக்கு அருகிலுள்ள கங்கை நதியில் ஒருவர் தனது படகில் அமர்ந்துள்ளார்.
Lær mer om hinduismen

Bildekort: Divali
Bildekort med ord, bilde og lyd som handler om høytiden Divali

Divali // தீபாவளி
En kort lesetekst med bilder og lyd om lysfesten Divali

Høytidskalender: Divali (ekstern lenke)
Les om Divali. Veilederkorpset i Stavanger kommune har publisert en flerkulturell kalender som viser ulike høytider.

Høytidskalender: Holi (ekstern lenke)
Les om Holi. Veilederkorpset i Stavanger kommune har publisert en flerkulturell kalender som viser ulike høytider.