Sang om en jeger // தாடியறுந்த வேடன்
Her finner du en sang som er skrevet av den kjente forfatteren Kalladi Veluppillai.
Sangen handler om en jeger som jakter et ekorn med hunden sin.
வீமா! வீமா! ஓடி வாவா – அணில்
வேட்டை ஆடிப்பிடித் தூட்டுவேன் வாவா
தேமா மரத்திற் பதுங்கி – மாங்காய்
தின்னும் அணிலைப் பிடிப்போம் ஒதுங்கி
மரத்தில் இருந்து குதித்தே – அடடா
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே பார்பார்
துரத்திப் பிடிபிடி வீமா – உச்சு
சூச்சூ அணில் எம்மைத் தப்பியும் போமா?
பொந்துக்குட் புகுந்தது வீமா – உந்தப்
புறத்தில்நில் அந்தப் புறத்தினில் வருவேன்
அந்தோ என் தாடியை விடுவாய் – அந்த
அணில் தப்பி ஓடிய தையையோ கெடுவாய்.
பாடல்:நவாலியூர் சோமசுந்தரப்புலவர்