Sang om mamma sin kjærlighet //அம்மா

Foto: Pixabay
காலைத் தூக்கி கண்ணில் ஒற்றிக்
கட்டிக் கொஞ்சும் அம்மா
பாலைக் காய்ச்சிச் சீனி போட்டுப்
பருகத் தந்த அம்மா.
புழதி போக்கி நீரும் ஆட்டிப்
பொட்டும் வைக்கும் அம்மா
அழுதிடாமல் பள்ளிக் கூடம்
அழைத்துச் செல்லும் அம்மா.
பள்ளிக் கூடம் விட்ட நேரம்
பாதி வழிக்கு வந்து
துள்ளிக் குதிக்கும் என்னைத் தூக்கித்
தோளில் போடும் அம்மா.