Sang om en påfugl // அழகான மயிலே

Foto: Pixabay
பெரியே மரத்தின் கொப்பிலே
பரவசமாய் இருப்பாய்.
பல வண்ணம் கொண்டே
பிரகாசமாய் ஒளிர்வாய்!
கார்முகிலைக் கண்டதும்
களிப்புடனே ஆடுவாய்.
தோகைதனை விரித்து
நடனம் காட்டி மகிழ்வாய்!
துள்ளு நடை போட்டு
துடிப்பாய் ஓடி வாராய்
கள்ளமில்லா மயிலே
சிறகடித்து பறப்பாய்!