Ord // சொற்கட்டுப் பாடல்

Ill:PixabaySang med sammensatte ord på tamil

Dette er en sang for barn hvor de skal finne sammensatte ord  og bygge på dette så lenge de klarer.

 

 

 

 

இது ஓர் விளையாட்டுப் பாடல். சிறுவர்களுக்கு இவ்வாறான விளையாட்டுப் பாடல்கள் மூலம் சொற்களஞ்சியத்தை விருத்தி செய்யலாம். சிறுவர்கள் விரும்பத்துடன் விளையாட்டு முறையில் கற்பதற்கு இவ்வாறான விளையாட்டுப் பாடல்களை உருவாக்கலாம். இறுதியில் விடை கூற முடியாது வரும் போது மற்றவர் தொடங்கலாம். இதனை ஓர் போட்டி விளையாட்டாகவும் விளையாடலாம். சிறுவர்கள் மிகவும் விரும்பி சொற்சேர்ப்பார்கள்.

 

எங்கே போறாய் – ஊருக்குப் போறேன்
எந்த ஊரு- சிங்கப்பூரு
எந்த சிங்கம்- ஆண்சிங்கம்
எந்த ஆண்- வேடுவ ஆண்
எந்த வேடன்- தாடி வேடன்
எந்த தாடி- கறுப்புத்தாடி
எந்த கறுப்பு- இருட்டுக் கறுப்பு
எந்த இருட்டு- கும்மிருட்டு
எந்த கும்மு- இந்தக் கும்மு (ஒருவரின் முதுகில் விளையாட்டிற்கு அடிப்பது)

 

எங்கே போற- ஊருக்குப் போறேன்
எந்த ஊரு- மயிலாப்பூரு
என்ன மயிலு – காட்டு மயிலு
என்ன காடு- யானைக்காடு
என்ன யானை – கொம்பன் யானை
என்ன கொம்பு- மான் கொம்பு
இவ்வாறே தொடரலாம்——-

 

எங்கே போற- ஆத்துக்குப் போறேன்
என்ன ஆறு- பாலாறு
என்ன பால்- கள்ளிப் பால்
என்ன கள்ளி- பாற் கள்ளி
என்ன பால்- பசுப்பால்
இவ்வாறே தொடரலாம்——-