Språk og samspill – svangerskap til nyfødt // மொழியும் இணைந்த செயற்பாடும்- கற்பகாலத்திலிருந்து குழந்தை பிறந்தது வரை
இதைப் பற்றி அறிந்துள்ளீர்களா?
குழந்தைகளுடன் அதிகம் பேசுவதன் மூலம் குழந்தையின் மொழி வளர்ச்சியைத் தூண்டலாம்.
இதயத்தின் மொழி
பெரும்பாலான மக்களுக்கு இதயத்தின் மொழி என்பது அவர்களின் உணர்வுகளை எளிதாக விளக்கிக் கலந்துரையாடக் கூடிய மொழியாகும். அத்தோடு தாங்கள் கனவு காணும் மொழியுமாகும். இதயத்தின் மொழி என்பது இலகுவாக உணரக் கூடிய உணர்வுபூர்வமான மொழியாகும்.
குழந்தையுடன் பேசும்போது உங்களுக்கு மிகவும் இயல்பான மொழியில் பேசுங்கள்.

கற்ப காலத்தில்
குழந்தை கற்பத்தில் இருக்கும் போதே பாடுங்கள் கதையுங்கள். உங்களது குரலை குழந்தை மீண்டும் கண்டறிந்து கொள்ளும். குழந்தையுடன் இயல்பான இதயமொழியில் பேசுங்கள். பாடுங்கள் – நீங்கள் பாடுவதை குழந்தை விரும்பிக் கேட்கும்.

குழந்தை பிறந்தவுடன்
குழந்தையானது மொழியினைப் பாவிக்காது விட்டாலும் தங்களுடன் தொடர்பு கொள்கிறது
குழந்தை அழுகிறது. சத்தம் செய்கிறது. துடிப்பாக இருப்பதுடன் முகபாவனைகளையும் காட்டுகிறது.
நீங்கள் பதிலளிப்பதையும், பதிலுக்கு ஒலிகளைப் பரிமாறுவதையும் குழந்தை விரும்புகிறது. மென்மையான குரலில் தாங்கள் பேசுவது குழந்தைக்குப் பிடிக்கும்.

குழந்தைக்காகப் பாடுங்கள்
உங்கள் இதய மொழியில் பாடுங்கள். உங்கள் குழந்தைப் பருவத்துப் பாடல்களைப் பாடுவது மிகவும் சிறப்பானதாகும்.

குழந்தைக்கு நீங்கள் அவசியமானவராகும்
குழந்தை உங்களைப் பார்ப்பதுடன் உங்களைப் பின்பற்றி உங்களிடமிருந்து கற்றும் கொள்கிறது.
நீங்கள் குழந்தைகளுடன் செயலாற்றும் போது நிறையப் பேசுங்கள். உதாரணமாக குழந்தையைப் பராமரிக்கையிலும் வெளியே உலாப் போகும் போதும் அல்லது உணவு தயாரிக்கும் போதும் நிறையப் பேசுங்கள்.
