Sang om tamilsk språk // எங்கள் தமிழ் மொழி
Dette er en sang om det tamilske språket. Budskapet til denne sangen er at det tamilske språket skal bli tatt vare på og respektert.
எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழியவே
சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்கத்
துலங்குக வையகமே
தொல்லை வினைதரு தொல்லையகன்று
சுடர்க தமிழ் மொழியே
வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழி
வாழ்க தமிழ் மொழியே
வானமறிந்த தனைத்து மறிந்து
வளர் மொழி வாழியவே!