Sang om tv // தொலைக்காட்சி

Illustrasjon: Pixabay
விந்தையான பெட்டியிது
தொலைதூரக் காட்சி யெல்லாம்
தொடுந்தூரம் தெரியவைக்கும்
அலைகடலைத் தாண்டி ஒளி
விண் வெளியில் நடப்;பவரை
வீட்டிற்கே கொண்டு வந்து
கண்ணெதிரில் காட்டிவிடும்
களிப்படையச் செய்து விடும்
வீட்டினுள்ளே திரையரங்கம்
வீடெல்லாம் கலை முழங்கும்
ஏட்டிலுள்ள கல்வியெல்லாம்
எளிதினிலே ஊட்டிவிடும்.