Hundevalp // நாய்க்குட்டி

Foto: PixabaySang om en valp
தோ… தோ… நாய்க்குட்டி
துள்ளி வாவா நாய்க்குட்டி.
உன்னைத் தானே நாய்க்குட்டி
ஓடி வாவா நாய்க்குட்டி.
கோபம் ஏனோ நாய்க்குட்டி?
குதித்து வாவா நாய்க்குட்டி.
கழுத்தில் மணியைக் கட்டுவேன்;
கறியும் சோறும் போடுவேன்.
இரவில் இங்கே தங்கிடு.
எங்கள் வீட்டைக் காத்திடு !
பாடல்வரி: அழ- வள்ளியப்பா