Ibsen // இப்சன் கவிதை

Foto: Adobe Stock- Henrik Ibsen by Gustav BorgenDen norsk fødte Henrik Ibsen (1828-1906) er en internasjonalt anerkjent dramatiker og lyrikker. Tamilsk dikter Rooban Sivaraja fra Oslo har nylig oversatt et av Ibsens diktene på tamilsk som er gjengitt her.  Passer bra for diktanalyse blant ungdomsskole elever.

உலகப்பெயர்பெற்ற நோர்வேயிய எழுத்தாளரும் நாடகாசிரியருமான கென்ரிக் இப்சனின் (1828-1906) எழுத்துக்கள் மிகவும் பிரபல்யமானவை. அவர் எழுதிய    Brand, Peer Gynt, En Folkefiende, Kejser og Galilæer, Et dukkehjem, Hedda Gabler, Gengangere, Vildanden, Rosmersholm போன்ற படைப்புகள் உலகப்பிரசித்தி பெற்றவை. அவரது அதிபிரசித்தமான கவிதைகளிலொன்றுநோர்வே வாழ் கவிஞர் ரூபன் சிவராஜா அவர்களால் அழகு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அக்கவிதை இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

மேல்வகுப்பு மாணவர்களுடன் இணைந்து கலந்துரையாடுவதற்குகந்த கவிதை.

இப்சன் கவிதை        
*********************’*

மாலைப் பொழுதொன்றில்
அந்தச் சிறுபெண் அங்கு அமர்ந்திருக்கிறாள்
தரையைப் பார்த்தபடி
இங்கு கீழே ஆழம்மிகு நிலத்துண்டில்
பரிச்சயமற்ற காடுகளின் பிம்பம் தெறிக்கிறது

தேடுவாரற்ற ஒருத்தியைப் போல்
ஏளனப் புன்னகையுடன்
உற்று உற்றுப் பார்க்கிறாள்
அக்கணம் பச்சை இலைகளைத் தழுவி
சந்தோச அலைகளாய்
மிதந்துகொண்டிருந்த அவள்
களங்கமற்ற குழந்தைப் பருவத்திற்குள் சென்றிருந்தாள்
அங்கு கீழே ஒரு நிழற்படத்தை கண்ணுற்றாள்
ஒரு இளைஞன் கையசைத்தபடி
மெல்லிய புன்னகையோடிருந்தான்
தொலைவில் அந்தக்காட்சி கண்களை நீங்கியது

ஓ.. இப்பொழுது அவள் வளர்ந்துவிட்டாள்
குழந்தைப்ப்பருத்தை
எத்தனை முறை நினைவில் மீட்டினும்
அது ஒருபோதும் திரும்பி வரப்போவதில்லை
அந்த நாட்களின் தரிசனங்களும்
சித்திக்கப்போவதில்லை என்பதை அறிந்திருந்தாள்
இப்பொழுதெல்லாம் அடிக்கடி
நீர்க்கரையில் அவள் இருக்கிறாள்
கண்ணீர் உறிஞ்சியிருந்த கன்னம்
ஆனந்தமாய் வழிந்தோடி மறைந்து
மாலைக்காற்றைப் பூசிக்கொள்கிறது.
அந்தக்கணம் சந்திரன் விசித்திரமான
ஒளியை வீசிக்கொண்டிருந்து

வளைந்த வில்லிலிருந்து தெறித்த அம்பு போல
அவள் வெளியை உற்று நோக்கியவாறிருக்கிறாள்
அந்தப் நிழற்படம் நிரந்தரமாய்
அவளின் பார்வைக்குள் தங்கிவிடுகிறது!

/தமிழில்: ரூபன் சிவராஜா