Kjærlighet og seksualitet//காதலும் பாலியலும்
அன்பு என்பது ஒருவரை நேசிப்பது. பெரும்பாலான மக்கள் யாருடனாவது அன்பாக இருப்பார்கள். அது பெற்றோராகவோ உடன்பிறந்தவர்களாகவோ அல்லது நண்பர்களாகவோ இருக்கலாம். இதில் காதலர்களிடையே அல்லது கணவன் மனைவிடையே ஏற்படும் உணர்வினைக் காதல் என்பர்
காதல் வாழ்க்கை என்பது நாடுகளுக்கிடையிலும் கலாச்சாரங்களுக்கு இடையிலும் வேறுபடுகிறது. இல்லற வாழ்வுக்கு ஒருவரையொருவர் தேர்ந்தெடுப்பதற்கு பெரும் வேறுபாடுள்ளது. சில இடங்களில் பெற்றோரே பிள்ளைகளுக்கு துணையை தேடிக் கொடுக்கிறார்கள். இது ஏற்பாடு செய்யும் திருமண முறையாகும்.
சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்வதற்கு அனுமதிக்கின்றனர். பிள்ளைகள் தங்களுக்கு மிகவும் பிடித்தவரை தாங்களே தேர்வு செய்வர். சில இடங்களில் பிள்ளைகளைக் கேட்காமல் பெற்றோர்கள் தாமே முடிவு செய்கிறார்கள். நோர்வேயில் ஒருவரைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்வது சட்டவிரோதமானதாகும். ஆனால் பிள்ளைகள் விரும்பி தமது விருப்புக்களை தெரிவித்தால் அனுமதிக்கப்படுவர் .
நோர்வேயில் தாங்கள் திருமணம் செய்ய விரும்பும் நபரை தாங்களே முடிவெடுக்க முடியும். திருமணம் செய்து கொள்வதற்கு முன் பல காதலர்கள் இருப்பதும் வழமையானது. பெரும்பாலானவர்கள் திருமணத்திற்கு முன்பு ஒன்றாக வாழ்கிறார்கள். இது காதலர்களாகவே இணைந்து வாழும் முறை என்று கூறுவர். நோர்வேயில் ஒன்றாக வாழ்பவர்களில் கால்வாசிப் பகுதியினர் திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழ்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகளைப் பெற்றும் வாழ்கிறார்கள்.
ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்தால் அதனை வேற்றுப்பாலினம் என்று அழைப்பர். ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்தால் அதனை ஓரினச்சேர்க்கை என்பர்.
சில நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருப்பது சட்டவிரோதமானது. அத்துடன் ஓரின சேர்க்கையாளர்கள் இணைந்து வாழ்ந்ததற்காக தண்டிக்கப்படலாம் அல்லது கொல்லப்படலாம். ஓரினச்சேர்க்கை தவறானது என்று சில மதங்கள் கூறுகிறது.
நோர்வேயில் நீங்கள் யாருடன் வேண்டுமானாலும் இணைந்து வாழலாம். ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவது சட்டவிரோதமானது. மேலும் எடுத்துக்காட்டாக பாலினச் சேர்க்கையாளர்களுக்கு வழங்கப்படும் சமமான உரிமைகளுடன் ஓரினச் சேர்க்கையாளர்களும் திருமணம் செய்து கொள்ளலாம்.
உடலுறவு என்பது காதல் உறவில் இயல்பானதாகும் . இது இரண்டு நபர்களுக்கிடையே நடைபெறும் தனிப்பட்ட விருப்பத்துக்குரிய செயலாகும். ஆனால் ஒருவர் இணைந்து வாழ்ந்தாலும் அவர்களுடைய பாலியலுணர்வை தாமே முடிவுசெய்ய உரிமையுண்டு. அதாவது ஒருவர் உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பின் அதை யாருடன் உறவுகொள்ளலாமென அவரே தீர்மானிக்க முடியும். ஒருவருடைய பாலியல் விருப்பத்தினை பெற்றோர்கள் மனைவிகள் அல்லது காதலர்கள் யாரும் தீர்மானிக்க முடியாது.
நீங்கள் சம்மதிக்காத உடலுறவு கற்பழிப்பு எனப்படும். இது நோர்வேயில் சட்டவிரோதமானதுடன் சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படலாம். உங்களுக்கு விருப்பம் இல்லாமல் மற்றவர்களைத் தீண்டவோ உணரவோ அனுமதிக்கத் தேவையில்லை. யாரையாவது தீண்டவோ அல்லது அரவணைக்கவோ சந்தேகம் ஏற்படின் அவர்களிடமே அதனைக் கேட்டு அறிந்து கொள்ளலாம்.
அகராதி
ஏற்பாடு செய்யும் திருமணமுறை – குடும்பத்தினர்
பிள்ளைகளுக்கான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதாகும்.
காதலர்கள் வாழ்வுமுறை – திருமணம்
செய்யாமல் சேர்ந்து வாழ்வது
வேற்றுபாலினம் – எதிர் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரைக் காதலிப்பது
ஓரினச்சேர்க்கை – ஒரே பாலினத்தைச் சேர்ந்த ஒருவரைக் காதலிப்பது
கற்பழிப்பு – கட்டாய பாலியல்
தொடர்பு
இத் தகவல்களும் படமும் பெர்கன் நகராட்சி மற்றும் zmekk.no அனுமதியுடன் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது