Regle for å lære ord // அந்தாதித் தொடை பாடல்


Denne sangen er en rim og regel sang. Gjennom denne sangen kan barn lett lære ord.

docxஅந்தாதித்_தொடை.rim og regel sang.docx

pdfஅந்தாதித்_தொடை.rim og regel sang.pdf 

இது ஓர் அந்தாதித் தொடைப் பாடலாகும். அதாவது முடிக்கும் சொற்களில் அடுத்த வரி ஆரம்பமாகும்.இது போன்ற பாடல் வரிகளால் சிறுவர்களுக்கு ஓசை நயத்துடனும் இலகுவில் கற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது.

தாய்மொழிக் கற்பிக்கும் ஆசிரியர்கள் இவ்வாறான பாடல்களைத் தெரிவு செய்து கற்பிக்கலாம்: சிறுவர்களுக்கு சொற்களஞ்சிய விருத்தியை இலகுவாக ஏற்படுத்தலாம். முதலடியில் முடியும் பணம் ,குணம் ,மணம் ,பூ கட்டுதல், பசு ,கறத்தல் ,பால், புளித்தல், புளி, தொங்கல், பாம்பு, கொத்துதல், கோழி ,நரி. சரி என்று வரும் நிறைநிலைப் பகுதிகள் அடுத்த அடிக்குத் தொடக்கமாவதனைப் பார்க்கலாம்.

பணம் பணம் பணம்

பணத்திற்கு இல்லை குணம்

குணத்திற்கு இல்லை மணம்

மணம் என்றால் பூ தானே

பூ என்றால் கட்டுவோமே

கட்டுவது என்றால் பசுதானே

பசு என்றால் கறப்போமே

கறப்பது என்றால் பால் தானே

பால் என்றால் புளிக்குமே

புளிக்கும் என்றால் புளிதானே

புளி என்றால் தொங்குமே

தொங்குவது என்றால் பாம்புதானே

பாம்பு என்றால் கொத்துமே

கொத்துவது என்றால் கோழி தானே

கோழி என்றால் கூவுமே

கூவும் என்றால் நரிதானே

நரி என்றால் அதோடு சரி.

முனைவர் மு.பழனியப்பன்