Islam // இஸ்லாம்
மத்திய கிழக்கில் உருவாக்கப்பட்ட மூன்று மதங்களில் காலத்தால் பிந்தியது இஸ்லாமாகும். யூதமதமும் கிறிஸ்தவ மதமும் மத்திய கிழக்கில் உருவாக்கப்பட்ட இரண்டு மதங்களாகும். யூதர்கள், கிறிஸ்தவர்கள் போலவே முஸ்லீம்களும் ஒரே கடவுள் என்ற நம்பிக்கை உடையவர்கள். அதனால் இம் மதங்களை ஏகதத்துவ மதங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
உலக மதங்களில் கிறிஸ்தவத்திற்கு அடுத்தபடியாக இஸ்லாம் இரண்டாவது பெரிய மதமாகும். உலகில் ஏறத்தாழ 1.7 பில்லியன் மக்கள் இஸ்லாத்தில் நம்பிக்கை கொண்டுள்ளனர். இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவர்கள் முஸ்லிம்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இஸ்லாமிய சமூகம் அரபியில் உம்மா என்று அழைக்கப்படுகிறது. உம்மாவை இரண்டு முக்கிய குழுக்களாகப் பிரிக்கலாம். அவையாவன சுன்னி முஸ்லிம், ஷியா முஸ்லிம் என்பவையாகும். முஹம்மது நபி இஸ்லாத்தை கி.பி 610 இல் நிறுவினார். அவர் பிறந்த நகரமான மக்காவில் இதனை நிறுவினார். மெக்கா சவுதி அரேபியாவில் அமைந்துள்ளது. முகமது 632 இல் காலமானார்.
குர்ஆன் மற்றும் ஹதீஸ்
குர்ஆன் இஸ்லாத்தின் மிக முக்கியமான புனித நூலாகும். இஸ்லாத்தின் குர்ஆன் நூலில் முஹம்மது நபிக்கு கடவுளிடமிருந்து தெளிவுபடுத்தப்பட்ட அறிவுரைகள் எழுதப்பட்டுள்ளன. குர்ஆன் முதன்முதலில் அரபு மொழியில் எழுதப்பட்டுள்ளது.
குர்ஆன் 114 சூராக்களைக் கொண்டுள்ளது. இச் சூராக்கள் அதன் நீளத்தைப் பொறுத்து அண்ணளவாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. நீளமான வரிகள் முதலிலும் குறுகிய வரிகள் கடைசியாகவும் வரும். முதலாவது வரி மட்டும் விதிவிலக்கானது. இது சிறு தொடக்கப் பிரார்த்தனையாக அல்-ஃபாத்திஹாவைக் கொண்டுள்ளது. இஸ்லாமியர்கள் குர்ஆன் படிக்கும் அதனை முன் முத்தமிடுகிறார்கள்.
முகமது இறந்த நூற்றாண்டுகளுக்குப் பின்பு அவர் கூறியவை அல்லது செய்தவை பற்றிய விபரங்களை ஹதீஸ் என்ற புத்தகங்களில் எழுதப்பட்டன. குர்ஆன், ஹதீஸும் முஸ்லிம்களின் சிறந்த வாழ்க்கை நெறியைக் கூறுகின்றன.
ஐவகைத் தூண்கள்
இஸ்லாம் ஒரு சட்டபூர்வமான மதம். இதன் கருத்து யாதெனில் முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட திட்டங்களையும் எது சரி ,எது தவறு என்ற விளக்கத்தினையும் அவர்களது கடமைகளையும் அடிப்படையாகக் கொண்டது. இது இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் விவரிக்கப்பட்டுள்ளது.
மதநம்பிக்கை
நம்பிக்கைச் சின்னம் அல்லது ஷஹாதா என்பது இஸ்லாத்தின் தூண்களில் முதன்மையானதாகும்.இது அரபு மொழியில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது: “அஷ்ஹத்வ் அனா லா இலா அல்லா வ அஷ்ஹத்வ் அனா முகமது ரசூல் அல்லா”. நோர்வே மொழியில் இதன் பொருள்: “அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை முகமது அவருடைய தீர்க்கதரிசி”.
பிரார்த்தனை
சலாத் அல்லது பிரார்த்தனை இரண்டாவது தூணாகும். இஸ்லாமியர்கள் ஒரு நாளைக்கு ஐந்து முறை கடவுளிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். முஸ்லீம்கள் தொழும் போது தங்கள் உடல்கள் மக்காவை நோக்கி இருக்கும்படி தொழுகை விரிப்பில் இருந்து தொழுவார்கள்.
பிரார்த்தனை செய்வதற்கு முன் சுத்தமாக இருப்பது முக்கியம். குர்ஆனில் இருந்த வாசகங்னை பிரார்த்தனைக்கு பயன்படுத்துவர். இது அராயிய மொழியில் உள்ளன. பிரார்த்தனை செய்யும் போது உடலைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். முதலில் நின்றும் பின்பு முழங்காலில் இருந்து நெற்றி தரையில் படுமாறும் கைகளை மடித்து குவித்து வைத்திருந்தும் பிரார்த்திப்பர். வெள்ளிக்கிழமைகளில் நண்பகல் வேளையில் மசூதியில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும். வெள்ளிக்கிழமை பிரார்த்தனையானது தினசரி ஐந்து தடவை செய்வதாகும். இதைவிட கூட்டுப் பிரார்த்தனை வேளைகளில் பிரசங்கம் நடைபெறும் . தொழுகையும் பிரசங்கமும் செய்பவரை இமாம் என்று அழைப்பர்.
பொதுநலப் பங்களிப்பு
ஜகாத் என்பது பொதுநல பங்களிப்பு மூன்றாவது தூண். ஜகாத் என்பது ஒருவர் வைத்திருக்கும் பணம், நகை, சொத்து ஆகியவற்றின் அளவைப் பொறுத்து செலுத்தப்படும் வரியாகும். பணம் தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படுகிறது.
நோன்பு
இஸ்லாத்தின் நான்காவது தூண் நோன்பு ஆகும். நோன்பு என்பது ரமலான் மாதத்தில் அதாவது சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை உண்ணவோ குடிக்கவோ கூடாது. குழந்தைகள் நோன்பு நோற்கத் தேவையில்லை. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு குடும்பம் இப்தார் என்று அழைக்கப்படும் இரவு உணவிற்கு கூடுகிறது. ரமலானில் உங்களிடம் உள்ளதற்கு நன்றியைக் காட்டுவதுடன் இல்லாதவர்களிடம் அதிக இரக்கத்துடன் இருப்பதும் முக்கியமானதாகும்.
யாத்திரை
ஐந்தாவது தூண் மெக்கா யாத்திரை செல்வதாகும் . ஹஜ்ஜை நிறைவேற்றுவதே குறிக்கோள். ஹஜ்ஜுடன் தொடர்புடைய பல சடங்குகள் உள்ளன. ஹஜ் பயணம் சரியாகக் கருதப்படுவதற்கு அனைத்து சடங்குகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். உதாரணமாக ஒரு சடங்காக காபாவைச் சுற்றி ஏழு சுற்றுகள் நடக்க வேண்டும். கபாவில் கருங்கல் இருப்பதால் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இஸ்லாத்தில் இந்தப் பெருங் கல்லானது பரலோக தோற்றம் கொண்டதெனவும் கேப்ரியல் தேவதையால் பூமிக்கு கொண்டு வரப்பட்டது எனவும் கருதப்படுகிறது.
முஸ்லிம்கள் வாய்ப்பு கிடைத்தால் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது புனித யாத்திரை செல்ல வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மூன்று முதல் நான்கு மில்லியன் முஸ்லிம்கள் மக்காவிற்கு பயணம் செய்கிறார்கள்.
காபா மக்காவின் பிரதான மசூதிக்குள் அமைந்துள்ளது.